தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mark Antony: இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. விஷாலுக்காக, விஜய் செய்யும் பெரிய விஷயம்

Mark Antony: இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. விஷாலுக்காக, விஜய் செய்யும் பெரிய விஷயம்

Aarthi V HT Tamil
Apr 27, 2023 11:37 AM IST

மார்க் ஆண்டனி படத்தின் டீஸரை நடிகர் விஷால் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மார்க் ஆண்டனி
மார்க் ஆண்டனி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

மார்க் ஆண்டனி படத்தின் டீஸர் இன்று ( ஏப்ரல் 27 ) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே

மார்க் ஆண்டனி பட டீஸரை நடிகர் விஜய் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விஷால் சமூக வலைத்தளத்தில் தளபதி விஜய்ஃபார் மார்க் ஆண்டனி (ThalapathiVijayForMarkAntony) என்ற ஹாஷ் டாக்கை மட்டும் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதே போல், ”என் அன்பு சகோதரன் & ஹீரோவை சந்தித்ததில் மகிழ்ச்சி.

என் டீஸரை பார்த்ததற்கு மிக்க நன்றி. உங்கள் ரசிகராக இருப்பதில் எப்போதும் பெருமைப்படுகிறேன்” எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

விஜய் மற்றும் விஷால் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். சிறிய வயதிலிருந்து விஷால், விஜயின் தீவிர ரசிகர். இதன் காரணமாக படத்தை விளம்பரம் செய்ய நேரடியாக விஜய் களத்தில் இறங்கிவிட்டார் போல.

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். பிறகு கால் சீட் பிரச்னை காரணமாக அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்