தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Sobitha : நாக சைதன்யா உடன் காதலா? ’நான் எந்த தவறும் செய்யவில்லை’- நடிகை சோபிதா துலிபாலா!

Actress Sobitha : நாக சைதன்யா உடன் காதலா? ’நான் எந்த தவறும் செய்யவில்லை’- நடிகை சோபிதா துலிபாலா!

Divya Sekar HT Tamil
May 12, 2023 12:23 PM IST

அரைகுறை அறிவுடன் சிலர் உருவாக்கி வரும் இந்த வதந்திகளுக்கு பதில் அளிப்பைதை விட எனது செயல்பாடுகளில் கவனத்தை செலுத்தவே நான் விரும்புகிறேன் என நடிகை சோபிதா துலிபாலா கூறியுள்ளார்.

 நடிகை சோபிதா துலிபாலா
நடிகை சோபிதா துலிபாலா

ட்ரெண்டிங் செய்திகள்

மறுபுறம் கஸ்டடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நாகசைதன்யா விவாகரத்துக்கு பின் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் காதல் மனைவி சமந்தாவுடனான பிரிவுக்கு பின்னர், தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய சோபிதா துலிபாலா என்பவரை டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இருவரும் நெருக்கமாக பழகி வரும் நிலையில் அவ்வப்போது ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகிறார்கள். தற்போது லேட்டஸ்டாக இவர்கள் விடுமுறையை கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். பிளாக் அவுட்பிட் அணிந்து சோபிதா - நாக சைதன்யா இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இருவரும் ட்ரெண்டாகினர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் நாக சைதன்யாவுடன் காதலா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை சோபிதா, ”இப்போது நான் படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்தது நடனமாடியது மகிழ்ச்சியான தருணம். இது போன்ற விஷயங்களில் தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன்.

அதை விட்டுவிட்டு நான் வெளிப்படையாக சொல்லாத ஒரு விஷயம் குறித்து வதந்திகள் பரவி வருகிறது என்றால் அதைப்பற்றி நான் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அதுவும் இல்லாமல் நான் எந்த தவறும் செய்யவில்லை. அரைகுறை அறிவுடன் சிலர் உருவாக்கி வரும் இந்த வதந்திகளுக்கு பதில் அளிப்பைதை விட எனது செயல்பாடுகளில் கவனத்தை செலுத்தவே நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்