Seenu Ramasamy: "அந்த 28 டேக், விஷ்ணு விஷாலுடன் நடிக்க மறுத்தது ஏன்?" மனிஷாவிடம் கேள்வி கேட்கும் சீனு ராமசாமி
என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவருடன் இணைந்து நான் ஏன் பணியாற்ற வேண்டும் எனக் கூறிய மனிஷா யாதவிடம். பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமானவர் மனிஷா யாதவ். ஆனால் அந்த படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டிலேயே தயாராகிவட்ட இடம் பொருள் ஏவல், பைனான்ஸ் பிரச்னை காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இதையடுத்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர், நடிகை மனிஷா யாதவுக்கு, இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இதையடுத்து நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவிக்கும் விடியோ ஒன்றை பதிவிட்ட சீனு ராமசாமி, மனிஷா யாதவ் தனது படத்தில் நடிப்பார் எனவும் கூறினார்.
இதற்கு தனது இன்ஸ்டாவில் பதில் அளித்த மனிஷா யாதவ், "விழா மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததை போல் சீனு ராமசாமிக்கும் தெரிவித்தேன். இதனால் எதுவும் மாறியதாக அர்த்தமில்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன். என்னை மரியாதை குறைவாக நடத்தியவரிடம் நான் ஏன் பணியாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.