Kaali Venkat: ‘தங்கப்லே..’ மீண்டும் மிரட்ட வரும் காளி வெங்கட்.. ஜோடி சேரும் வணங்கான் நடிகை! - என்ன படம் தெரியுமா?
Kaali Venkat: சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தோனிமா’ படத்தை ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கியுள்ளார். பாக்யராஜ் மற்றும் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். - என்ன படம் தெரியுமா?
சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் - ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’!- இந்தப்படத்தின் விபரங்களை பார்க்கலாம்.
கதையின் கரு:
சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் ’தோனிமா’. நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை இந்தப் படம் திரையில் காட்ட இருக்கிறது என்று படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பொறுப்பற்ற நபராக வரும் கதாபாத்திரத்தில் வரும் காளி வெங்கட்!
அவரது கணவராக வரும் கோடி கதாபாத்திரம் குடும்பத்தின் மீது பொறுப்பற்ற ஒருவராக வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த தம்பதியின் மகன் கடுமையான உடல்நலப் பிரச்சினையை எதிர்கொள்வதால், குடும்பம் கடினமான தடைகளை எதிர்கொள்கிறது. இந்த சவால்களை கடப்பதற்கான அவர்களின் பயணம்தான் கதையின் மையம். இது நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து, பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்ற வைக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் விபரங்கள்
காளி வெங்கட் மற்றும் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தோனிமா’ படத்தை ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கியுள்ளார். பாக்யராஜ் மற்றும் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இஜே ஜான்சன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முழு வெளியீட்டு உரிமையையும் எஸ்பிஆர் ஸ்டுடியோஸ் எஸ்பி ராஜா சேதுபதி கைப்பற்றியுள்ளார்.
தங்கப்லே என்று அவர் பேசிய வசனம் நெட்டிசன்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது
முன்னதாக, சமூகத்தில் எளிய மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைச் சொல்லும் திரைப்படமாக அநீதி திரைப்படம் உருவாகி இருந்தது. இதில் காளி வெங்கட், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் காளி வெங்கட்டின் கதாபாத்திரம் பெருமளவு கொண்டாடப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தங்கப்லே என்று அவர் பேசிய வசனம் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. இந்தப்படத்தை பிரபல இயக்குநரான வசந்த பாலன் இயக்கி இருந்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த வசந்தபாலன் இந்தப்படத்தின் மூலம் வெற்றியை பெற்றார். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான தலைமை செயலம் வெப் சீரிஸ் கவனம் பெற்றது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்