Nivin Pauly: பாலியல் வழக்கு.. நிவின் பாலியிடம் விசாரணையை தொடங்கிய SIT.. உண்மை வெளிவருமா?
Nivin Pauly: சினிமாவில் வாய்ப்பு வழக்குவதாகக் கூறி பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிவின் பாலியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் நிவின் பாலி. இவருக்கு ஏராளமான பெண்கள் ரசிகர்களாய் உள்ள நிலையில், பெண் ஒருவருக்கு சினிமா வாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிவின் பாலி பாலியல் துன்புறுத்தல் செய்தார் என புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த புகாரை விசாரிக்கும் பொருட்டு, மலையாள சினிமா நடிகர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்கும் சிறப்புக் குழு நடிகர் நிவின் பாலியிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நிவின் பாலி மீது புகார்
முன்னதாக பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் ஹோட்டலில் நடிகர் நிவின் பாலி தனக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார் என மலையாள சினிமா நடிகர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்கும் சிறப்புக் குழுவிடம் புகார் அளித்திருந்தார்.
சுமார் 40 வயதாகும் அந்தப் பெண், எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்தவர். இவர் நிவின் பாலி, வித்யா என்ற பெண் உள்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது ஜாமினில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
ஆதாரமற்ற வழக்கு
இந்த நிலையில், நிவின் பாலி தன் மீது கொடுக்கப்பட்ட புகார் போலியானது எனக் கூறிய மனுவில் அளித்திருந்த வாக்குமூலத்தை சிறப்பு புலனாய்வுக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அதன்படி, தன் மீது குற்றம்சாட்டிய பெண் குறிப்பிட்டிருந்த தேதியில் தான் கொச்சியில் ஒரு படபிடிப்பில் இருந்ததாக நிவின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள திரையுலகில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்த தகவல்கள் குறித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பின், பல நடிகைகளும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் கூறி வந்த நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான், நடிகர் நிவின் பாலி மீது 37 பெண்கள் பாலியல் புகாரளித்ததாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால், சட்டப்படி ஒருவர் தான் புகாரளித்துள்ளார்.
நிவின் பாலிக்கு ஆதரவாக பேசிய பயில்வான்
நிவின் பாலி மிது 37 பெண்கள் என்ன 107 பெண்கள் பாலியல் வன்கொடுமை ரீதியான குற்றச்சாட்டுகளை சுமத்தலாம். ஏனென்றால் இப்போதுள்ள சினிமா அவ்வாறு மோசமாக உள்ளது. இங்கு சில பெண்கள் சினிமாவில், நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலேயே இதுபோன்ற குற்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
நிவின் பாலி எந்தப் பெண்களையும் தேடிச் செல்லவில்லை. தன்னை தேடி வந்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்தியுள்ளார் என பயில்வான் பேசி பலரின் கண்டனத்தையும் பெற்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.