Bayilvan: 37 என்ன 107 பெண்கள் கூட இருக்கலாம்... நிவீன் பாலி குறித்து பகீர் கிளப்பிய பயில்வான்....-actor bayilvan ranganathan reveal many accusation about actor nivin pauly - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: 37 என்ன 107 பெண்கள் கூட இருக்கலாம்... நிவீன் பாலி குறித்து பகீர் கிளப்பிய பயில்வான்....

Bayilvan: 37 என்ன 107 பெண்கள் கூட இருக்கலாம்... நிவீன் பாலி குறித்து பகீர் கிளப்பிய பயில்வான்....

Malavica Natarajan HT Tamil
Sep 28, 2024 12:35 PM IST

Bayilvan: மலையாள சினிமாவில் ஹோமா கமிட்டியின் அறிக்கை பல திடுக்கிடும் தகவல்களை தந்துகொண்டிருக்கும் நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர் நிவின் பாலி குறித்து அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.

Bayilvan: 37 என்ன 107 பெண்கள் கூட இருக்கலாம்... நிவீன் பாலி குறித்து பகீர் கிளப்பிய பயில்வான்....
Bayilvan: 37 என்ன 107 பெண்கள் கூட இருக்கலாம்... நிவீன் பாலி குறித்து பகீர் கிளப்பிய பயில்வான்....

ஹேமா கமிட்டியும் பின்னணியும்

இந்த நிலையில், ஏற்கனவே, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான நடிகர் நிவின் பாலி குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் திரைப்பட படப்பிடிப்பை முடித்து வீட்டிற்கு திரும்பிய பிரபல நடிகை ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்த விசாரணையில், மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வந்த திலீப் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கேரள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைத்து தர வேண்டும் என நடிகைகள் சிலர் அம்மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலரான வல்சலகுமாரி, நீதிபதி ஹேமா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அறிக்கை சமர்பிப்பு

இந்தக் குழு, கேரள நடிகைகள் பலரிடம் தீவிரமாக விசாரித்து, அவர்களின் பாதுகாப்பு, பாலியல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்து வந்தது. பின் 2019ம் ஆண்டு இந்த விசாரணையை மையமாக வைத்து அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால், இந்த அறிக்கையில், பல நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் இடம்பெற்றிருப்பதால், அது பொதுவெளியில் வெளியிடப்படாமலே இருந்தது. மேலும், நடிகைகளின் தகவல்களைத் தவிர்த்து மற்ற அறிக்கையை வெளியிட முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் தான், கேரள திரைப்பட தயாரிப்பாளர் ஹேமா கமிஷனின் அறிக்கையை வெளியிடக் கூடாது எனக் கூறி வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பரபரத்த கேரள திரையுலகம்

பின், பல்வேறு எதிர்ப்புகளை மீறி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கேரள திரைத்துறையில் முன்னணி இடத்திலுள்ள பல நடிகர்களின் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து கேரள திரையுலகில் புயலே கிளம்பியது. பல நடிகர்களும் தங்களுக்கு முன் ஜாமின் பெற துடித்தனர்.

அதுமட்டுமின்றி, மலையாள திரையுலக சங்கமான அம்மா கூண்டோடு கலைக்கப்பட்டது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தமிழ், மலையாளத்தில் பிரபலமான நடிகராக உள்ள நிவின் பாலி மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர். அவர் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சில திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.

நிவின் பாலியும் குற்றச்சாட்டுகளும்

யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த பயில்வான், நிவின் பாலி மீது 37 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பயில்வான் ரங்கநாதன் கூறியது தான் அதிர்ச்சிக்குறியது.

நிவின் பாலி மிது 37 பெண்கள் என்ன 107 பெண்கள் பாலியல் வன்கொடுமை ரீதியான குற்றச்சாட்டுகளை சுமத்தலாம். ஏனென்றால் இப்போதுள்ள சினிமா அவ்வாறு மோசமாக உள்ளது. இங்கு சில பெண்கள் சினிமாவில், நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலேயே இதுபோன்ற குற்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.

அவரா தேடிச் சென்றார்?

நிவின் பாலி, மிகவும் இளம் நடிகர். பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார். அதனை வைத்துக்கொண்டு, அவர் பெண்களை தேடிச் சென்றார் என நான் சொல்லவில்லை. அதேசமயம், அவர் தன்னை தேடி வந்த பெண்களை எல்லாம் பயன்படுத்தி இருக்கலாம். இவர்மீது புகார் அளித்தவர்கள் அனைவருமே சினிமா துறையை சார்ந்தவர்களே. மக்கள் மத்தியில் மவுசு உள்ள இவர்கள் ஏன் அப்போது இந்த சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிவின் இன்னொரு ஜெமினி கணேசனா?

மேலும் பேசிய அவர், தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக திகழ்ந்தவர் ஜெமினி கணேசன். இவர் தன்னுடைய 75வது வயதிலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, பல பெண்களுக்கு என் மீது ஆர்வம் இருந்தது. அதை பயன்படுத்திவிட்டேன் என்றார்.

அதேபோல தான் நிவின் பாலி, இதுவரை ஒரு பெண் தான் அவர் மீது புகாரளித்து உள்ளார். அந்தப் புகாருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற ஆதாரத்தை நிவின் பாலி கோர்ட்டில் சமர்பித்து விட்டார். கோர்ட்டுக்கு தேவை ஆதாரம் தானே. அதுமட்டுமல்லாமல், நிவின் பாலி, தானக சென்று யார் கையையும் பிடித்து இழுக்க வில்லை. இந்தப் பெண்களே விருப்பப்பட்டு தானே சென்றார்கள் எனக் கூறியுள்ளார்.

இவரின் பேச்சு குற்றச் சம்பவங்களுக்கு துணை போவதாக உள்ளது எனக் கூறி நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வந்தாலும் இவர் அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன் போக்கில் சென்றுகொண்டே இருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.