Bayilvan: போதை விருந்து நடத்தும் ஹேமா கமிட்டிக்குத் தூபம்போட்ட மலையாள நடிகை.. மோசம்போன எக்கச்சக்க நடிகைகள்: பயில்வான்-bayilvan ranganathan spoke about the malayalam actress who put incense to the hema committee for holding a drug party - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: போதை விருந்து நடத்தும் ஹேமா கமிட்டிக்குத் தூபம்போட்ட மலையாள நடிகை.. மோசம்போன எக்கச்சக்க நடிகைகள்: பயில்வான்

Bayilvan: போதை விருந்து நடத்தும் ஹேமா கமிட்டிக்குத் தூபம்போட்ட மலையாள நடிகை.. மோசம்போன எக்கச்சக்க நடிகைகள்: பயில்வான்

Marimuthu M HT Tamil
Sep 14, 2024 05:17 PM IST

Bayilvan: போதை விருந்து நடத்தும் ஹேமா கமிட்டிக்குத் தூபம்போட்ட மலையாள நடிகை.. மோசம்போன எக்கச்சக்க நடிகைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.

Bayilvan: போதை விருந்து நடத்தும் ஹேமா கமிட்டிக்குத் தூபம்போட்ட மலையாள நடிகை.. மோசம்போன எக்கச்சக்க நடிகைகள்: பயில்வான்
Bayilvan: போதை விருந்து நடத்தும் ஹேமா கமிட்டிக்குத் தூபம்போட்ட மலையாள நடிகை.. மோசம்போன எக்கச்சக்க நடிகைகள்: பயில்வான்

இதுதொடர்பாக நடிகரும் மூத்த சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கிங் 24x7 யூட்யூப்புக்கு அளித்த பேட்டியில், ‘’நடிகர் நெப்போலியன், தமிழக அமைச்சர் கே.என்.நேருவுடைய நெருங்கிய உறவினர். ஆரம்பத்தில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சராகப் பணியாற்றியவர். அதன்பின், மாநிலத்தில் பெரியதொகுதியான வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, நெப்போலியன் சட்டமன்ற உறுப்பினராக ஆனார். இதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மனதில் இடம்பெற்று மத்திய அமைச்சரானார். மத்திய அமைச்சரானபின், அவரது பார்வை உலகப்பார்வையானது. தொழில் அதிபர் ஆனார், அமெரிக்காவிற்குச் சென்றார். அமெரிக்காவில் மிகப்பெரிய கணினி நிறுவனம் ஒன்றினைத் தொடங்கினார். அதன்பிறகு, திமுகவில் இருந்து பாஜகவில் சேர்ந்தார், நடிகர் நெப்போலியன். பாஜகவில் நடிகர் நெப்போலியன் சேர்ந்ததற்கான காரணமே, அமெரிக்கத் தொழில் நுட்பத்தைத் தெரிந்துகொள்ளவும், நிறைய பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கவும் தான் எனத் தெரியவருகிறது.

மகனின் ஆசையை நிறைவேற்றும் நெப்போலியன்:

இன்றைக்கு பன்முகத்தொழிலதிபராக மாறிவிட்டார், நெப்போலியன். இவரின் மூத்தமகன் தனுஷூக்கு, தசைச் சிதைவு நோய் இருக்கிறது. அவரால் நடக்கமுடியாது. ஆனால், மற்றபடி, சாதாரணமாகத் தான் இருப்பார். மூத்த மகனுக்குத் திருமணம் செய்யும் கடமை நெப்போலியனுக்கு இருந்தது. அமெரிக்காவில் படித்த பெண்ணைப் பார்த்தால் சரியாக இருக்காது என்று சொல்லி, திருநெல்வேலியில் கல்லிடைக்குறிச்சி என்ற கிராமத்தில், அக்சயா என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார், நடிகர் நெப்போலியன். அக்சயாவும், தனுஷூம் வீடியோ காலில் பேசிக்கொண்டார்கள். தெரிந்துகொண்டார்கள். அந்த அடிப்படையில் அக்சயாவின் முழு சம்மதத்துன் இந்தத் திருமணம் நடக்கிறது.

முன்னதாக நெடுநேரம் பயணித்து, அமெரிக்காவில் இருந்து இந்தியா வர தனுஷூக்கு இயலாமையால், நெப்போலியனும், அவரது மனைவியும் கல்லிடைக்குறிச்சிக்கு வந்து தனுஷின் நிச்சயத்தை நடத்தினார்கள். அப்போது வீடியோகாலில் மணமகனும், மணமகளும் பேசிக்கொண்டார்கள்.

இந்தச் சூழ்நிலையில் திருமணத்தை ஜப்பானில் வைத்துக்கொள்வது என முடிவு செய்தார், நெப்போலியன். இதுதொடர்பாக சென்னை வந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுப்போனார், நடிகர் நெப்போலியன். நவம்பர் மாதம் நடக்க இருக்கும் திருமணத்துக்கு இப்போதே திருமண அழைப்பினைக் கொடுத்துவிட்டுப்போனார்.

சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது விமான நிலையத்துக்கே சென்று வரவேற்பினைக் கொடுத்தார், நெப்போலியன். கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் அமெரிக்காவில் இருந்து சொகுசுக் கப்பலில் ஜப்பானுக்குப் பயணமாகினர், நெப்போலியனின் குடும்பத்தினர்.

தமிழகத்தில் இருந்து மணமகள் அக்சயாவும் அந்தக் கப்பலில் பயணப்பட்டார். ஜப்பானில் திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்குப் பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தக் கப்பல், பயணத்தில் ஒவ்வொரு நாடுகளாகச் சுற்றிப் பார்த்து இளைப்பாறிச் செல்கின்றனர்.

தனது மகனின் ஆசைக்காக விருப்பத்துக்காக, ஜப்பானில் திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார், நெப்போலியன். அவர் நினைத்திருந்தால், தனி விமானத்தை ஏற்பாடு செய்திருக்கமுடியும். இருப்பினும், தன் மகனின் சவுகரியத்துக்காக கப்பலில் பயணிக்கிறார், நடிகர் நெப்போலியன்.

சொர்ணமால்யாவுக்கு நேர்ந்த சோகம்:

நடிகை சொர்ணமால்யா, மிகச்சிறந்த தொகுப்பாளினி. சில படங்களிலும் நடித்தார், சொர்ணமால்யா. திடீரென்று திருமணம் செய்துகொண்டு வெளிநாடில் செட்டில் ஆனார். செட்டில் ஆன கையோடு, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டார். சமீபத்தில் அவர் அளித்தபேட்டியில், தான் செய்த தவறு ஆபாசப் படத்தில் நடித்ததுதான் எனச் சொல்லியிருக்கிறார். ஒன்றரை சீன் தான் நடிச்சேன். படம் ரிலீஸானதுக்குப்பின், தான் அதன் தாக்கம் தெரிந்தது. எல்லோரும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆரம்பத்தில் அதுபற்றி எதுவும் தெரியாது. பின்னர்தான், தெரிந்தது அந்தப் படத்தில் நாம் நடித்தது தவறு என்று. பின் தயாரிப்பாளரைத் திட்டிவிட்டேன். இது ஒருவித தவறு என்றால், தன்னுடைய இன்னொரு தவறு திருமணம் தான் எனக் கூறியிருக்கிறார். ஏனெனில் அப்போது சரியாக விசாரிக்காமல் அவசர அவசரமாகத் திருமணம் செய்துகொண்டோம் என வேதனைப்பட்டிருக்கிறார்.

தான் ஒரு மலையாளப் படத்தில் நடித்தபோது தன்னை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ய சிலர் முயன்றனர். அதில் இருந்து தான் தப்பியதும், தன் அக்காவை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் புரொடக்‌ஷன் மேனேஜர் ஆகியோர் பாய்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். பின்னர், கதவை உடைத்துக்கொண்டு நான் வெளியில் வந்து புகார்செய்தேன் என்று சொன்னார், நடிகை சர்மிளா. இந்தச் சம்பவத்தை கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் அவ்வாறு நடந்தது உண்மைதான் எனக் கூறியிருக்கிறார்.

மலையாள நடிகையின் வேஷம்:

ஹேமா கமிட்டி உருவாகக் காரணமாக இருந்தது, மலையாளத் திரையுலக நடிகைகள் அமைப்பு தான். இந்தக் குழுவில் ரேவதி, பார்வதி, மஞ்சுவாரியர், ரீமா கல்லிங்கல் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் முக்கிய விஷயம், ரீமா கல்லிங்கல் ஒழுங்கானவர் அல்ல. அவர் அடிக்கடி போதை விருந்து நடத்திக்கொண்டிருப்பவர். அந்த மது பார்ட்டியில் கலந்துகொண்டு பல நடிகைகள் மோசம் போயிருக்கிறார்கள். இது தனக்குத் தெரியும் என்று நடிகை சுஜித்ரா தெரிவித்திருக்கிறார். போதை பார்ட்டி தொடர்பாக, ரீமா கல்லிங்கலும், அவருடைய காதல் கணவர் ஆஷிக் அபுவும் கைதுக்கு உள்ளாகி, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று புதிய தகவலைக் கூறியிருக்கிறார், சுஜித்ரா. ஹேமா கமிட்டிக்கு உதவிய ரீமா கல்லிங்கல், மது விருந்து நடத்தியிருப்பது அதிர்ச்சிக்குரிய தகவல்'' என நடிகர் பயில்வான் ரங்கநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

நன்றி: கிங் 24x7

பொறுப்பு துறப்பு

இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.