தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ssss Movie Review: ஸ்மார்ட் பொண்ணா? ஸ்மார்ட் போனா? எந்த காதல் ஜெயித்தது?

SSSS Movie Review: ஸ்மார்ட் பொண்ணா? ஸ்மார்ட் போனா? எந்த காதல் ஜெயித்தது?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 24, 2023 11:56 AM IST

வருடத்தின் முதல் படமே சிவாவிற்கு நல்லதொரு படமாக வந்திருக்கிறது. ஸ்விக்கி டெலிவரி செய்யும் ஊழியராக சிவா.. வழக்கமான அதே முகபாவனை.. கொஞ்சம் கூடமாறாத நடிப்பு பாணி.. ஆனால் சிரிக்க வைக்கிறார்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின் போஸ்டர்
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின் போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

கதையின் கரு

இன்ஜினியரிங் முடித்த வேலையில்லா பட்டதாரி சிவா. ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்து வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

சிவா
சிவா

இந்த நிலையில்தான் ஷா ரா மூளையை பிசுக்கி கண்டுபிடித்த ஸ்மார்ட் போனான சிம்ரன் சிவாவின் வாழ்க்கைக்குள் நுழைகிறது.

லட்சுமி வந்த நேரம்

லட்சுமி வந்த நேரம்.. என்பது போல ஸ்மார்ட் போன் வந்த நேரம், சிவாவின் வாழ்க்கை அடியோடு மாறுகிறது. சிவாவுக்கு தேவையான அனைத்தையும் சிம்ரன் செய்து கொடுக்கிறாள். ஒருக்கட்டத்தில் தான் வெறும் கருவிதான் என்பதை மறந்து சிவாவின் மீது காதலும் கொள்கிறாள்.

சிம்ரனாக மேகா ஆகாஷ்
சிம்ரனாக மேகா ஆகாஷ்

இதை சிவாவிடம் அவள் வெளிப்படுத்த, நிஜத்தை சொல்லி அவன் தவிர்க்கிறான். இதில் கோபமடையும் சிம்ரன்.. சிவாவிற்கு தான் யார் என்று காண்பிக்க செய்யும் சேட்டைகளை லாஜிக்குகள் இல்லாமல் சொன்னால் அதுதான் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் கதை!

நடிப்பு எப்படி

வருடத்தின் முதல் படமே சிவாவிற்கு நல்லதொரு படமாக வந்திருக்கிறது. ஸ்விக்கி டெலிவரி செய்யும் ஊழியராக சிவா.. வழக்கமான அதே முகபாவனை.. கொஞ்சம் கூடமாறாத நடிப்பு பாணி.. ஆனால் சிரிக்க வைக்கிறார்.. 

டெலிவரி செய்யும் ஊழியர்கள் மீது வாடிக்கையாளர்கள் காட்டும் வெறுப்பை அவர் காமெடியாக சொன்னாலும்.. அது கொஞ்சம் நின்று நாம் யோசிக்க வேண்டிய விஷயம் மக்களே.. 

கதாநாயகியாக அஞ்சுகுரியன்.. பெரிதாக ரோல் இல்லை; சிம்ரனாக மேகா ஆகாஷ்.. பெயருக்கு ஏற்றார் போலவே எக்ஸ்பிரஷ்ன்களை தூவி நம் மனதை கொள்ளை அடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மாகாபா ஆனந்திற்கு இநதப்படத்தில் நல்ல ஸ்பேஸ்; அதை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். ஷா ராவின் வழக்கமான மாடுலேஷன் காமெடிகள் சிரிக்க வைத்தாலும்... சில இடங்களில் அது நமக்கு எரிச்சலை தருகிறது. மனோவின் காமெடிகள் அல்டிமேட்.

ஸ்டாராங்கான ஒன்லைன்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி.என் ஒரு ஸ்டாராங்கான ஒன்லைனை பிடித்தது மட்டுமல்லாமல் அதை தனது சுவாரஸ்சியமான திரைக்கதையால் பின்னி, படம் முழுக்க நம்மை போராடிக்காமல் பார்த்துக்கொண்டார்; அதிலேயே இந்தப்படம் பாதி தப்பித்துவிட்டது. படத்தின் மாபெரும் பலம் கதாபாத்திர தேர்வு. குறிப்பாக பின்னணி பாடகர் மனோவை டைரக்டர் கையாண்ட விதம்.. அவருக்குள் இருந்த நடிகனை நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே கொண்டு வந்திருந்தது. கலக்கிட்டீங்க மனோ.. 

விஷ்வஸ் எஃபெக்ட்ஸ் ஓகே.. ஆனால் இசை? 

போனை கண்டுபிடித்ததிற்கான ஆரம்பக்கதை தொடங்கி சிம்ரன் தொடர்பான காட்சிகள், கிளைமேக்ஸில் பொம்மை ஃபைட் என அனைத்தையும் பிசிறுதட்டாமல் செய்திருக்கிறது விஷ்வஸ் எஃபெக்ட்ஸ் டீம்.  அதற்காகவே விஷ்வல் டீமிற்கு தனிபாராட்டுகள். வில்சனின் கேமரா கொடுத்திருந்த ஃபரஷ்னஸ் படம் முழுக்க நம்மையும் ஃபரஷ்ஷாக வைத்திருந்தது. பாடல்கள் எதுவும் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. பின்னணி இசையில் படத்திற்கு தேவையானதை செய்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். முதல்பாதியில் இருந்த திரைக்கதையில் இருந்த க்ரிப்பான என்கேஜ்மென்ட் இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது படத்தின் மைனஸ். மற்றப்படி லாஜிக் இல்லாமல் சிரிக்க மட்டும் வேண்டும் என்றால் நிச்சயம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்திற்கு போகலாம்.. இது டைரக்டர் படம்யா..!

IPL_Entry_Point

டாபிக்ஸ்