Suchithra: ஜெயம் ரவி மனைவிக்கு சுசித்ரா சொன்ன அட்வைஸ்.... டேன்ஜரான கெனிஷா ட்ரீட்மெண்ட்! மீண்டும் புயலைக் கிளப்பிய சுச்சி
Suchithra: ஜெயம் ரவியை தன்னுடன் தக்கவைத்துக் கொள்ள ஆர்த்தி இதனை எல்லாம் ஈகோ பார்க்காமல் செய்ய வேண்டும் என பாடகி சுசித்ரா சில அட்வைஸ்களை ஆர்த்திக்கு வழங்கியுள்ளார். அதே சமயம், பாடகி கெனிஷா குறித்த அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றையும் கொடுத்து புயலைக் கிளப்பியுள்ளார்.

பிரபலங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது வந்து சிக்கியுள்ளவர் ஜெயம்ரவி. இவரது விவாகரத்து அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் நாட்கள் தாண்டி இன்றளவும் பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு பாடகி சுசித்ரா உள் நுழைந்துள்ளார். பாடகி சுசித்ரா, அவரது கணவர் கார்த்திக், நடிகர் தனுஷ், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் குறித்தும் பேசி அவ்வப்போது விவாதங்களை கிளப்பி வருகிறார். இந்நிலையில், அவர் அவர் தற்போது விவாகரத்து விஷயத்தில் ஜெயம்ரவியின் மனைவிக்கு அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் கூறிய சில விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெனிஷா தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தி மனநல சிகிச்சை அளித்து வருகிறார். எனவே, ஜெயம் ரவியை தன் சமாக்க அவரது மனைவி ஆர்த்தி ஈகோ பார்க்காமல் கண்ணகியாக மாற வேண்டும் என சுசித்ரா அட்வைஸ் அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஜெயம் ரவி விவாகரத்து
ஜெயம் ரவி தனது மனைவியுடன் ஏற்பட்ட சில கருத்து மோதல்களால் பிரிந்து வாழ்ந்து வந்தத நிலையில், மனைவியை விட்டு பிரிவதாகவும், விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
