Vairamuthu: ‘பைத்தியம்.. வக்கிர வார்த்தை.. ’ புயல் கிளப்பிய பாடகி சுசித்ராவை விளாசிய வைரமுத்து-vairamuthu gives tremandous reply to singer suchitra who gives statement about him - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vairamuthu: ‘பைத்தியம்.. வக்கிர வார்த்தை.. ’ புயல் கிளப்பிய பாடகி சுசித்ராவை விளாசிய வைரமுத்து

Vairamuthu: ‘பைத்தியம்.. வக்கிர வார்த்தை.. ’ புயல் கிளப்பிய பாடகி சுசித்ராவை விளாசிய வைரமுத்து

Aarthi Balaji HT Tamil
Sep 20, 2024 09:44 AM IST

Vairamuthu: தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்திய பாடகி சுசித்ராவுக்கு, வைரமுத்து தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

Vairamuthu: ‘பைத்தியம்.. வக்கிர வார்த்தை.. ’ புயல் கிளப்பிய பாடகி சுசித்ராவை விளாசிய வைரமுத்து
Vairamuthu: ‘பைத்தியம்.. வக்கிர வார்த்தை.. ’ புயல் கிளப்பிய பாடகி சுசித்ராவை விளாசிய வைரமுத்து

இதையடுத்து என்னுடைய பாட்டி வைரமுத்துவிடம் மறைமுகமாக சுசித்ரா உங்களுடைய மகள் போன்றவள். .அவளை நீங்கள் தான் வளர்த்தெடுக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வைரமுத்துவிற்கு வேர்த்துக்கொட்டி விட்டது. இதையடுத்து அவர் கர்ஷிப்பை வைத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டார்.

வெளுத்த பாட்டி

இப்படி பாட்டி சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தபோதே, ஏதோ பரிசு தருகிறீர்கள் என்று கூறினீர்களே எங்கே என்று கேட்க, வைரமுத்து ஏதாவது கொடுத்து சமாளிக்க வேண்டும் என்பதற்காக, உள்ளே இருந்து இரண்டு ஷாம்பு பாட்டில்களை எடுத்து என் கையில் கொடுத்தார்.

எப்படி கையாள வேண்டும்

இந்த துறையில் ஆரம்பத்தில் நான் பின்னணி பாடகர்களுடன் கோரஸ் பாடி கொண்டிருக்கும் பொழுதே, அவரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அங்கு தான் நான் இது போன்ற நபர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். அப்போது வைரமுத்து பற்றி அவர்கள் கூறும் பொழுது, அவருக்கு நாம் வளைந்து கொடுக்கவில்லை என்றால், அவர் சில பரிசு பொருட்களை நமக்கு தருவார்.ஒவ்வொரு பரிசுப் பொருளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அவரது வீட்டிற்கு வெளியே இருக்கும் நபர்களுக்கு அந்த பொருளுக்கான அர்த்தம் நன்றாகவே தெரியும். இது என் மனதில் வந்தது “ எனக் கூறி இருந்தார்.

வைரமுத்து பதிலடி

இந்நிலையில் தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்திய பாடகி சுசித்ராவுக்கு, வைரமுத்து தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், “ வாழ்வியல் தோல்விகளாலும்

பலவீனமான இதயத்தாலும்

நிறைவேறாத ஆசைகளாலும்

மன அழுத்தத்திற்கு உள்ளாகி

அதன் உச்சமாய்

மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்

ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது

வக்கிர வார்த்தைகளை

உக்கிரமாய் வீசுவர்;

தொடர்பற்ற மொழிகள் பேசுவர்

பைத்தியம்போல் சிலநேரமும்

பைத்தியம்

தெளிந்தவர்போல் சிலநேரமும்

காட்சியளிப்பர்

தம்மைக் கடவுள் என்று

கருதிக்கொள்வர்

இந்த நோய்க்கு

‘Messianic Delusional Disorder’

என்று பெயர்

அவர்கள் தண்டிக்கப்பட

வேண்டியவர்கள் அல்லர்;

இரக்கத்திற்குரியவர்கள்;

அனுதாபத்தால்

குணப்படுத்தக் கூடியவர்கள்

உளவியல் சிகிச்சையும்

மருந்து மாத்திரைகளும் உண்டு

உரிய மருத்துவர்களை

அணுக வேண்டும் “ எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் வந்த வண்ணம் உள்ளன.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சினிமா தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பெற இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.