தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Silambarasan Priya Bhavani Shankar Gowtham Karthik Pathu Thala Teaser Launch Event Highlights

Pathu Thala:‘பத்து தல ரீமேக் இல்லை’ ஆடியோ லான்ச் எப்போது? டீசர் ஹைலைட்ஸ் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 04, 2023 11:41 AM IST

பத்து தல படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் இடம் பெற்ற ஹைலைட்ஸ் மொமண்டுகளை இங்கு படிக்கலாம்

பத்து தல டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி ஹைலைட்ஸ்!
பத்து தல டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி ஹைலைட்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

பத்துதல டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி!
பத்துதல டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி!

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா, “ "இந்தப்படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் நடந்து கொண்டு இருக்கிறது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. படம் வெளியானாலும் அது எப்படியான வெற்றியாக அமையும்.. என்ற கம்பேரிசனை நினைத்து பயமாக உள்ளது.

இது ரீமேக் கிடையாது. தழுவல்தான். 90% வேறாக கொடுத்திருக்கிறேன். இரண்டு மூன்று காட்சிகள் மட்டும்தான் ஒன்றாக இருக்கும். சிலம்பரசன் சிறப்பாக நடித்துள்ளார். கெளதம் மேனன், கெளதம் கார்த்திக், ரெடின் கிங்ஸ்லி, கலையரசன், டிஜே அனைவருமே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் சார் சிறந்த இசையை கொடுத்துள்ளார். 

ஒளிப்பதிவாளர் ஃபரூக், எடிட்டர் பிரவீன் என இவர்கள் எனக்கு பக்கபலம். எஸ்.டி.ஆர். படம் என்றாலே வசனம் தான் முக்கியாமனது. அது சிறப்பாக வந்துள்ளது. படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் உள்ளது. இதில் சாயிஷா ஆர்யா எக்ஸ்க்ளூசிவ்வான டான்ஸ் கொடுத்துள்ளார். அதற்கான படப்பிடிப்பு இப்போது போய்க் கொண்டிருக்கிறது.” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “ நான் எது கேட்டும் ரஹ்மான் சார் நோ சொன்னதே கிடையாது. கடைசி நேரத்தில் அவர் 'நம்ம சத்தம்' லிரிக்கல் வீடியோவில் சிறப்புத் தோற்றத்தில் ஷூட் செய்து அனுப்பினார். அவரது அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். சிலம்பரசன் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் உள்ளதால் பாங்க்காக்கில் இருந்து டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்தார்". என்றார்.

கெளதம் கார்த்திக்குடன் இயக்குநர் கிருஷ்ணா!
கெளதம் கார்த்திக்குடன் இயக்குநர் கிருஷ்ணா!

நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, "என் மனதில் இருந்த அனைத்தையும் பேசி விட்டார்கள்; இந்த புராஜெக்ட்டின் இரண்டு வெர்ஷன்களிலும் நான் நடித்துள்ளேன். நிச்சயம் 'மஃப்டி' போல இருக்காது. எஸ்.டி.ஆர்ருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய ப்ளஸ். அவருடன் நிறைய ஃபேன் மொமண்ட் இருந்தது. சக்தி சரவணன் சார் எனக்கு ஆக்‌ஷன் காட்சிகளை சிறப்பாக சொல்லிக் கொடுத்தார். கிருஷ்ணா சாரை நான் முதலில் சந்தித்தபோது, 'உன் கண்கள் ரொம்ப சாஃப்ட்டாக இருக்கு. அதிக கோபப்பட பழகிக்கோ' என சொன்னார். அதை இப்போது வரை செய்து கொண்டிருக்கிறேன். படம் நிச்சயம் வெற்றியடையும்" என்றார்.

படத்தின் மிகப்பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. படத்தின் அனைத்து பாடல்களும் பல நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளதையும் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தனர். ஏ.ஆர். ரஹ்மான் லைவ்வாக பாடல்களை மேடையில் பாட உள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் பேசும் போது , "என்னிடம் ஏன் மற்ற நடிகர்களின் படங்களுக்கு புரோமோஷனுக்கு வருவதில்லை எனக் கேட்டனர். நான் சிம்புவின் தீவிர பக்தன். இந்தப் படத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து பூ தூவி புரோமோஷன் செய்ய வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். அதற்கான அனுமதி வாங்கும் வேலைகள் நடந்து வருகிறது" என்றார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்