கமலின் அடையாளம்..சென்னை மக்களை வெறுக்கிறேன்! பெயரையே மாற்றிக்கொண்டேன் - குண்டை தூக்கி போட்ட ஸ்ருதிஹாசன்
எங்கு சென்றாலும் கமலின் அடையாளம், சென்னை மக்களை வெறுக்க வைத்தது. இதற்காக என் பெயரையே மாற்றிக்கொண்டேன் என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். அத்துடன் பிடிவாதமான தாய், தந்தையரின் வளர்ப்பு தனக்கும், சகோதரிக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் மூத்த மகளாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, பாலிவுட் சினிமாக்களில் தனது நடிப்பு திறமையால் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி, இசையமப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வருபவராகவும் இருக்கிறார்.
பிரபல யூடியூப்பரான மதன் கெளரியின் சாட் ஷோ ஒன்றில் தனது வாழ்ககை, சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார் ஸ்ருதிஹாசன். அப்போது, எங்கு சென்றாலும் கமல்ஹாசனின் மகள் என்ற நிழல் என்னை சுற்றியே வந்ததால் சென்னை இருப்பதை வெறுத்ததாகவும், பிடிவாதமான பெற்றோர்களின் வளர்ப்பு எனது மற்றும் தங்கை அக்ஷ்ரா வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
மதன் கெளரியுடனான உரையராடலின் போது நடிகை ஸ்ருதிஹாசன், "எனது பெற்றோராக கமல்ஹாசனும், சரிகாவும் இருப்பது பெருமை தான் என்றாலும், எனது தந்தையின் புகழ் சில சமயங்களில் சுமையாக உணர்கிறேன்.