தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shruti Haasan: மண்டை மேல இருக்குற துண்ட மறந்த ஸ்ருதிஹாசன்! டவலுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம் வைரல்

Shruti Haasan: மண்டை மேல இருக்குற துண்ட மறந்த ஸ்ருதிஹாசன்! டவலுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம் வைரல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 25, 2024 10:30 PM IST

Shruti Haasan: பணிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் மண்டை மேல இருக்குற துண்ட மறந்த நிலையில், தலையில் துண்டு இருப்பது கூட தெரியாமல் புறப்பட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த வேடிக்கையான தருணம் குறித்து அவர் தலையில் டவலுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

டவலுடன் இன்ஸ்டாவில்  ஸ்ருதி பகிர்ந்த புகைப்படம் வைரல்
டவலுடன் இன்ஸ்டாவில் ஸ்ருதி பகிர்ந்த புகைப்படம் வைரல்

ட்ரெண்டிங் செய்திகள்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் தனது பணி முதல் தனிப்பட்ட வாழக்கை வரை பல்வேறு விஷயங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருபவராக உள்ளார்.

டவலை மறந்த ஸ்ருதி

இதையடுத்து மே 25ஆம் தேதியான இன்று அவர் இன்ஸ்டாவில் வேடிக்கையான புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், பணிக்கு விறுவிறுப்பாக கிளம்பிய ஸ்ருதி மண்ட மேல் கட்டப்பட்டிருக்கும் துண்டு இருப்பதை மறந்து விட்டு காரில் ஏறி புறப்பட்டுள்ளார்.

காரில் திடீரென தனது தலையில் துண்டு இருப்பதை கவனித்துள்ள அவர் அதை புகைப்படமாக எடுத்து "மிகவும் குழப்பத்தில் இருந்ததால் வீட்டை என் தலையில் டவல் இருக்கிறது என்பது கூட தெரியாமல் வீட்டை விட்டு கிளம்பிவிட்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.

டவலுடன் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டா ஸ்டேட்ஸில் பகிர்ந்திருக்கும் புகைப்படம்
டவலுடன் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டா ஸ்டேட்ஸில் பகிர்ந்திருக்கும் புகைப்படம்

ரிகர்சல் ஒன்றுக்கு செல்ல வேண்டிய ஸ்ருதி, லேட்டானதால் அவசரத்தில், முடியை கழுவிய பின் தலையில் கட்டிய டவலை கூட எடுக்க மறந்துவிட்டது தெரிகிறது. குறிப்பாக பெண்களில் பலருக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்படி நடந்திருக்கும் என்பதை உறுதியாக கூறலாம்.

கூலி படத்தில் ஸ்ருதிஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுதவிர அத்வி ஷேஷ் உடன் டகோயிட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களாக இருக்கின்றன. இதுதவிர சலார் இரண்டாம் பாகத்திலும் அவர் தனது கதாபாத்திரத்தை ரீப்ரைஸ் செய்யவுள்ளார்.

ஸ்ருதி பிரேக்அப்

சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பாய்பிரண்ட் சாந்தனு ஹசாரிகாவுடன் பிரேக்அப் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட போது அவரிடம் நீங்கள் சிங்கிளா இல்லை கமிட்டடா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ஸ்ருதி, "நான் தற்போது சிங்கிளாக தான் இருக்கிறேன். மிங்கிள் ஆக விருப்பமில்லை. இனி வேலை மட்டும்தான். வாழ்க்கைய என்ஜாய் செய்கிறேன்" என பதில் அளித்தார். இவரது போல்டான இந்த பதில் வைலரானது.

வைரலான இனிமேல் பாடல்

கடந்த சில வாரங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஸ்ருதி நடித்த இனிமேல் என்ற ரிலேஷன்ஷிப் குறித்த பாடல் வைரலானது. கமல்ஹாசன் பாடல் வாரிகள் எழுத ஸ்ருதிஹாசன் பாடலுக்கு இசையமைத்திருந்தார். இதில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் ஆகியோர் ரெமான்ஸ் வெகுவாக பேசப்பட்டது. அத்துடன் இருவரும் காதலிப்பதாக பலர் கொளுத்தி போட்டனர்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் லாபம். மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருப்பார். தற்போது ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சென்னை ஸ்டோரி என்ற படம் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிளில் உருவாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்