இனி உலக நாயகன் பட்டம் தேவை இல்லை.! அன்புக்கு நன்றி சொல்லி எண்டு கார்டு போட்ட கமல்..
மக்கள் இனி தன்னை உலக நாயகன் என அழைக்க வேண்டாம். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், கட்சித் தொண்டர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ என்றோ குறிப்பிட்டால் போதுமானது எனக் கூறியுள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

தன் குழந்தைப் பருவம் முதல் சினிமாவிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் கமல் ஹாசன். இவர், தமிழ் சினிமாவில் பல உலகளாவிய தொழில் நுட்பங்களையும், புதுப்புது பரிட்சைய முயற்சிகளையும் செய்து தன்னுடன் சேர்த்து சினிமாவையும் முன்னேற்றியவர்.
தன் நடிப்புத் திறமையால் உலக மக்களைக் கட்டிப் போட்டதுடன், உலகளாவிய சிந்தனையைக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இவருக்கு உலக நாயகன் என்ற அடை மொழியும் வழங்கப்பட்டுள்ளது. ஏன், 10 கதாப்பாத்திரங்களை ஏற்று, ஆன்மீகம் தொடங்கிய அறிவியல் வளர்ச்சி வரை பேசிய தசாவதாரம் படத்தில் இவரை சிறப்பிக்கும் வகையில், உலக நாயகனே என்று தொடங்கும் பாடலும் இடம் பெற்றுள்ளது.
உலக நாயகன் பட்டம் வேண்டாம்
இந்நிலையில், தன்னை உலக நாயகன் எனும் அடை மொழியைக் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று KH கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.