தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shruti Haasan And Lokesh Kanagaraj In Pub And Video Gets Viral On Net

Shruti and Lokesh: பப்பில் நண்பர்களுடன் ஜாலி மோடில் ஸ்ருதி - லோகேஷ் கனகராஜ்! வைரலாகும் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 27, 2024 07:49 PM IST

இனிமேல் ஆல்பம் பாடலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் ஒருவருக்கொருவர் கெமிஸ்ட்ரியை தெறிக்கவிட்டனர். தற்போது இருவரும் இணைந்து பப் ஒன்றில் இருக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் தீ ஆகியகியுள்ளது.

இனிமேல் பாடலில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன்
இனிமேல் பாடலில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

பற்றி எரியும் கெமிஸ்ட்ரி

இனிமேல் பாடலில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் இடையிலான நெருக்கமான ரெமான்ஸ் காட்சிகளும், அதில் இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் பற்றி எரியும் விதமாக இருந்தன.

ஏற்கனவே இந்த பாடல் டீசர் காட்சி வெளியிட்டபோத ஸ்ருதி, லோகேஷ் குறித்த ரெமான்ஸ் வெகுவாக பேசப்பட்டது. அத்துடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இனிமேல் பாடலில் இருவரின் காதல், நெருக்கமான காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருந்தது.

இனிமேல் பாடல் இந்த காலத்தில் இருந்து வரும் காதல் ரிலேஷன்ஷிப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இந்த பாடலால் லோகேஷ் - ஸ்ருதிஹாசன் கோலிவுட்டின் வைரல் ஜோடி ஆகியுள்ளனர்.

பப்பில் லோகேஷ் - ஸ்ருதிஹாசன்

இதைத்தொடர்ந்து பப் ஒன்றில் லோகேஷ் - ஸ்ருதி இணைந்து பானம் அருந்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. தங்களது நண்பர்களுடன் அவர்கள் இருவரும் ப்பபில் இருக்கும் ரசிகர் ஒருவர் அவர்களுக்கு தெரியாமல் விடியோ எடுத்துள்ளார்.

இந்த விடியோ படமாக்கும்போது பப்பில் பாதுகாப்பில் இருந்தவர்கள் குறுக்கே வர உடனடியாக அந்த நபர் ரெக்கார்டு செய்வதை ஸ்டாப் செய்துள்ளார். தற்போது இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன.

லோகேஷ் விளக்கம்

இனிமேல் பாடல் மூலம் நடிகர் ஆனது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்த லோகேஷ் கனகராஜ், "கமல்ஹாசன் கேட்டு எந்தவொரு விஷயத்தையும் என்னால் மறுக்க முடியாது. அவர் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார்" என்றார்.

தலைவர் 171 படம்

லோகேஷ் கனகராஜ் கடைசியாக தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த ஆண்டில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளது. தலைவர் 171 என்ற அழைக்கப்படும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அந்த படத்தில் நடித்து முடித்த பின்பு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளார்.

சலார் 2 படத்தில் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக கடந்த டிசம்பரில் சலார் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே இனிமேல் என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்து, நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த பாடலுக்கு கமல்ஹாசன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்