90ஸ்களில் நடந்த உண்மை கதை.. முறுக்கு மீசையுடன் சண்முகபாண்டியன்..தெறிக்கவிடும் ஃபஸ்ட் லுக் போஸ்டர்
தெறிக்கவிடும் ஃபஸ்ட் லுக் போஸ்டர், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த உண்மை கதையாக பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்து வரும் புதிய படம் உருவாகிறது.
மறைந்த நடிகரும், கேப்டன் விஜயகாந்த் இளையமகனுமான சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக இருக்கிறார். இவர் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கடந்த ஆக்ஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
டைட்டில் போஸ்டர் வெளியீடு
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை தலைப்படன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்துக்கு கொம்புசீவி என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சண்முகபாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, "1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள்" என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக குற்றவாளிகளை கீழே உட்கார வைத்து போலீசார் நின்றவாறு பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதை நேர் மாறாக போலீஸ் கீழே பயத்துடன் உட்கார்ந்து இருக்க, சரத்குமார் கெத்தாக சேரில் உட்கார்ந்திருக்க அவரது தலைமையில் சண்முக பாண்டியன் உள்பட சிலர் துப்பாக்கியுடன் மிரட்டல் தொனியில் நிற்கும் விதமாக இந்த போஸ்டர் உள்ளது.
காமெடி கலந்த ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் தார்னிகா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த ஓ போடு ராணியின் மகள் தான். காளிவெங்கட், முனீஸ் காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய பகுதிகளை சுற்றி இருக்கும் கிராமங்களின் பின்னணியில் படம் உருவாகி வருகிறது. படத்தில் சண்முகபாண்டியன் ரவுடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
சண்முக பாண்டியன் படங்கள்
கடந்த 2015இல் வெளியான சகாப்தம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் சண்முகபாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து தமிழன் என்று சொல், மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார்.
ராகவா லாரன்ஸ் விலகல் பின்னணி
விஜயகாந்த் இறந்த பின்னர் அவரது மகன் சண்முக பாண்டியன் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் விடியோ மூலம் அறிவித்தார். இதன் பின்னர் அவர் படைத்தலைவன் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அவர் படத்தில் நடிக்கவில்லை. இருப்பினும் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் சில காட்சிகளில் தோன்ற வைத்துள்ளனர்.
இதற்கிடையே ராகவா லாரன்ஸ் நடிக்காதது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்த நிலையில், படத்தின் இயக்குநர் அன்பு வெளியிட்ட அறிக்கையில், "சண்முக பாண்டியன் கலை உலக வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு அவரது படத்தில் நடிப்பதாக லாரன்ஸ் விடியோ வெளியிட்டிருந்தார்.
படைத்தலைவன் படக்குழு சார்பாக நானும், சண்முக பாண்டியனும் அவரை நேரில் சந்தித்தோம். படத்தின் கதையை கேட்ட அவர் தானும் நடிப்பதாக கூறினார். அதற்கான பணிகளை தொடங்கினோம்.
ஆனால் படம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ராகவா லாரன்ஸுக்கான வேடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமா என தோன்றியது.
தனிப்பட்ட முறையில் மீண்டும் அவரை நான் சந்தித்து இதுபற்றி எடுத்து சொன்னபோது, என் முடிவுக்கு அவரும் சம்மதம் சொன்னார்.
படைத்தலைவன் பட புரொமோஷனுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் இந்த படத்தில் லாரன்ஸ் நடிக்க முடியாமல் போனதன் உண்மையான காரணம் அறியாமல் அவரை பற்றி உண்மைக்கு மாறான வதந்திகள் வலைதளங்களில் பரவி வருகின்றன. அவர்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்கவே இந்த அறிக்கை" என்று குறிப்பிட்டிருந்தார்.
டாபிக்ஸ்