Sibiraj: டுவிட்டர் ப்ளூடிக்! எலன் மஸ்க்கிடம் ஜிபே எண் கேட்டு சிபிராஜ் லொள்ளு!
டுவிட்டரில் ப்ளூடிக்குடன் தனது கணக்கை தொடர் எலன் மஸ்க்கின் கூகுள் பே நம்பரை கேட்டு லொள்ளு செய்துள்ளார் சிபிராஜ். ப்ளூடிக் வைத்திருப்பவர்கள் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டுவிட்டர் தலைவர் எலக் மஸ்க் அறிவித்திருப்பதற்கு இவ்வாறு சிபிராஜ் டுவிட் செய்துள்ளார்
உலக அளவில் புகழ் பெற்ற சமூக வலைத்தளமாகவும், பிரபலங்கள் அதிகம் உள்ள வலைத்தளமாகவும் உள்ள டுவிட்டரின் புதிய தலைவராகியுள்ளார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க்.
உலகின் டாப் பாணக்காரராக இருக்கும் எலன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்கா டாலருக்கு வாங்கினார். கடந்த இரு நாள்களுக்கு முன் அதன் தலைவராக பொறுப்பேற்றவுடன் சிஇஓ பராக் அகர்வால், டாப் பொறுப்புகளில் வகித்த சிலரை நீக்கினார். அத்துடன் டுவிட்டரால் சரிபார்க்கப்பட்டு ப்ளூடிக் பெற்றிருக்கும் பயனாளர்களிடம் மாதம்தோறும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு தனது முதல் டாஸ்க்காக வழங்கினார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ப்ளூடிக் கணக்கு வைத்திருப்பவர்களும், ப்ளூடிக் கணக்கை தொடர விரும்புகிறவர்களும் மாதம்தோறும் 8 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என புகைப்படம் ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
அதில், 30 நிமிடத்தில் காலியாகும் ஸ்நாக்ஸ் சாப்பிட 8 அமெரிக்க டாலர் செலுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கும் நாம், 30 நாள்களுக்கு அதே 8 டாலர் செலுத்த அழுகிறோம் என சொல்லும் விதமாக புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதைத்தொட்ர்ந்து மீண்டும் இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமிழ் சினிமா நடிகரான சிபிராஜ், "உங்கள் Gpay நம்பரை அனுப்புங்கள்" என்று எலன் மஸ்க் டுவிட்டுக்கு கிண்டல் செய்யும் விதமாக பதில் அளித்துள்ளார்.
சிபிராஜின் டுவிட் கணக்கு ப்ளூடிக்குடன் உள்ளதால் அவர் இவ்வாறு பதிவு செய்துள்ளார். இதையடுத்து சிபிராஜின் இந்த டுவிட் பதிவு வைரலான நிலையில் அவரை கலாய்த்தும், கேலி செய்தும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்