தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raghava Lawrence: ஓடி ஓடி உதவி செய்தது இதற்கு தானா? கட்சியில் இணையும் கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ்?

Raghava Lawrence: ஓடி ஓடி உதவி செய்தது இதற்கு தானா? கட்சியில் இணையும் கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ்?

Aarthi Balaji HT Tamil
Jun 13, 2024 07:20 PM IST

Raghava Lawrence: கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் கட்சியில் இணைய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆம்.. விஜய் ஆரம்பித்து இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியில் தான் இருவரும் இணைய முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கட்சியில் இணையும் கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ்?
கட்சியில் இணையும் கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ்?

ஸ்டாண்ட் - அப் காமெடியன் என்பதைத் தவிர, அவர் தனது சமூகப் பணிகளுக்காகவும் அறியப்படுபவர், பாலா. மேலும் அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு உதவுவதற்காக செலவிடுகிறார்.

குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், போதிய மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது என பலவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்.

மிக்ஜாம் புயல்

மேலும், கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் தாக்கிய போது 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாயை பாலா வழங்கினார். இப்படி பல விஷயங்களை செய்து வரும் பாலா, சமீபத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து உள்ளார் . 

மாற்றம் சேவை

பாலாவின் தன்னலமற்ற சேவையை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் , இனிமேல் அவர் செய்யும் அனைத்து நலத்திட்டங்களிலும் தனது பங்களிப்பாக இருப்பேன் என்றார்.

ட்ரெண்டிங் செய்திகள்

உதவி செய்யும் பிரபலங்கள்

அந்த வகையில், கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் பல உதவிகளை செய்து வருகிறார்கள். மாற்றம் என்ற சேவை அறக்கட்டளையை தொடங்கி எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இதில் சாதரண மக்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை இணைந்து இருக்கிறார்கள்.

கருப்பு பணம் மாற்றமா?

இந்நிலையில் மாற்றம் சேவை மூலமாக கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் செய்யும் உதவிகளுக்கு ஒரு பக்கம், பாராட்டு வந்தாலும் மறுபக்கம் விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. 

மேலும் ஏற்கனவே இருக்கும் கருப்பு பணத்தை மாற்றவே இப்படி உதவி செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மறுபக்கம் அரசியலில் களமிறங்கவே இப்படி செய்கிறார்கள் என்ற ஒரு பேச்சும் இருக்கிறது.

இருப்பினும் தங்களை விமர்சனம் செய்பவர்களை கண்டு கொள்ளாமல் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா தொடர்ந்து உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அரசியலில் இறங்க திட்டமா?

இந்நிலையில் கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் கட்சியில் இணைய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆம்..  விஜய் ஆரம்பித்து இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியில் தான் இருவரும் இணைய முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இருவரது செயல்களை நடிகர் விஜய் பாராட்டிய நிலையில் அவர் இருவரையும் தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உறுதியான தகவல் இல்லை என்பதால் கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து கட்சியில் இணைவர்களா? அல்லது சேவை மட்டும் செய்வார்களா என்ற தகவல் விரைவில் வெளியாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.