தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Gautam Gambhir: பிளாங் செக் கொடுத்த ஷாருக்கான்! இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பு - என்ன செய்ய போகிறார் கம்பீர்?

Gautam Gambhir: பிளாங் செக் கொடுத்த ஷாருக்கான்! இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பு - என்ன செய்ய போகிறார் கம்பீர்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 26, 2024 05:30 PM IST

இந்திய அணி பயிற்சியாளார் வாய்ப்பு கைகூடி வரும் நிலையில், அதற்கான விருப்பமும் இருந்தாலும் கம்பீர் என்ன செய்ய போகிறார் என்பது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வழிகாட்டியாக இருக்க கம்பீருக்கு பிளாங் செக் ஷாருக்கான கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிளாங் செக் கொடுத்த ஷாருக்கான்! இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பு - என்ன செய்ய போகிறார் கம்பீர்?
பிளாங் செக் கொடுத்த ஷாருக்கான்! இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பு - என்ன செய்ய போகிறார் கம்பீர்?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் 2027 உலகக் கோப்பை வரை செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கரிடம் அணுகியபோது அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

கம்பீருக்கு வாய்ப்பு

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. மிகவும் முக்கிய பொறுப்பான இதற்கு பல முன்னாள் வீரர்கள் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் ஓபனரும், ஐபிஎல் தொடரில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்து வரும் கெளதம் கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதைத்தொடர்ந்து இந்த பணிக்கு கம்பீர் பொறுத்தமானவராக இருப்பார் என பலரும் அவருக்கு ஆதரவு குரல்கள் கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே மே 27ஆம் தேதி இந்திய அணி பயிற்சியாளருக்காக விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கம்பீர் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில் சென்னையில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டியின் போது, பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள், கம்பீருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும், அதன் பிறகு முறையான அறிவிப்பு கூட வெளியாகலாம் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஷாருக்கான் அளித்த பிளாங்க் செக்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறை சாம்பியன் ஆகியுள்ளது. இந்த இரண்டு முறையும் கொல்கத்தாவும் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனாக கம்பீர் உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகிய பிறகு அரசியல் பக்கம் சென்ற கம்பீர், 2022 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக கம்பேக் கொடுத்தார். 2022, 2023 சீசன்களில் லக்னோ அணியுடன் பயணித்த அவரை, கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக, அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் அழைத்து வந்தார்.

அப்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியை நிர்வகிக்குமாறு கம்பீரிடம் கேட்டுக்கொண்டதாகவும், அவரிடம் பிளாங்க் செக் கொடுத்து விருப்பமான தொகையை நிர்ணயித்து கொள்ளுமாறும் கூறினாராம். எனவே கொல்கத்தா உரிமையாளர் ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இந்திய அணியின் பயிற்சியாளர் வாய்ப்புக்கான முடிவை எடுக்க வேண்டிய சூழலும் கம்பீருக்கு உருவாகியுள்ளது.

இருப்பினும் கம்பீர் முடிவு என்னவாக இருக்கும் என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து உலா வரும் தகவல்களுக்கும் விடை கிடைத்துவிடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024