National Film Awards: மாஸ் காட்டிய மணிரத்னம்;பொன்னியின் செல்வன் -1 -ற்கு இத்தனை தேசிய விருதுகளா? - முழு லிஸ்ட் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  National Film Awards: மாஸ் காட்டிய மணிரத்னம்;பொன்னியின் செல்வன் -1 -ற்கு இத்தனை தேசிய விருதுகளா? - முழு லிஸ்ட் இங்கே!

National Film Awards: மாஸ் காட்டிய மணிரத்னம்;பொன்னியின் செல்வன் -1 -ற்கு இத்தனை தேசிய விருதுகளா? - முழு லிஸ்ட் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 16, 2024 06:57 PM IST

National Film Awards: பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. - எந்த பிரிவில் தெரியுமா?

National Film Awards: மாஸ் காட்டிய மணிரத்னம்;பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தேசிய விருது! - எந்த பிரிவில் தெரியுமா?
National Film Awards: மாஸ் காட்டிய மணிரத்னம்;பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தேசிய விருது! - எந்த பிரிவில் தெரியுமா?

70 வது தேசிய திரைப்பட விருது

கடந்த ஆண்டு புஷ்பா, கங்குபாய் ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றன. இந்நிலையில் 70 ஆவது தேசிய திரைப்பட விருது இன்று (ஆக. 16) அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

39 மொழிகளில் இருந்து சிறந்த படங்களை தன்னால் பார்க்க முடிந்தது என்று கூறி விருது அறிவிப்பிற்குள் சென்றனர். இந்த ஆண்டு நடுவர் குழுவில் சிறப்பு திரைப்பட ஜூரியின் தலைவராக ராகுல் ரவைல் உள்ளார். நான்-ஃபீச்சர் ஃபிலிம் ஜூரியின் தலைவர், நிலா மதாப் பாண்டா இருக்கிறார் மற்றும் சினிமா ஜூரி பற்றிய சிறந்த எழுத்தாளரின் தலைவராக கங்காதர் முதலியார் இருக்கிறார்.

பொன்னியின் செல்வன்

கடந்த 2022 ஆம் ஆண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் ஐஸ்வர்யாராய், விக்ரம், கார்த்தி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, சோபிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம், பொன்னியின் செல்வன் முதல் பாகம்.

பொன்னியின் செல்வன் 1 பாகத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.  

இந்தப் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிறந்த ஒலி அமைப்பிற்கான விருதும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒலி அமைப்பாளராக பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிறந்த பின்னணி இசைக்கான விருது பொன்னியின் செல்வன் பாகம் 1 - ல் இசையமைப்பாளராக பணியாற்றிய ஏ. ஆர். ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

4 விருதுகள்

சிறந்த ஒளிப்பதிவு- ரவி வர்மன் ( பொன்னியின் செல்வன் பாகம் 1 )

சிறந்த பின்னணி இசை -ஏ.ஆர்.ரஹ்மான் ( பொன்னியின் செல்வன் பாகம் 1)

சிறந்த திரைப்படம் - ( பொன்னியின் செல்வன் பாகம் 1) -

சிறந்த ஒலி வடிவமைப்பு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி - ( பொன்னியின் செல்வன் பாகம் 1)

மொத்தம் 4 தேசிய விருதுகள் பெற்று பொன்னியின் செல்வன் பாகம் 1 சாதனை படைத்து உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

சினிமா தொடர்பான அனைத்து அப்டேட் செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்க, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்.

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.