தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: சத்யன், மீரா நிச்சயத்துக்காக சீதா போடும் மாஸ்டர் பிளான்

Seetha Raman: சத்யன், மீரா நிச்சயத்துக்காக சீதா போடும் மாஸ்டர் பிளான்

Aarthi V HT Tamil
Aug 08, 2023 12:10 PM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா சொப்னாவை வீட்டுக்கு அழைக்க பிளான் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மகா சொப்னாவை ஒரு கோவிலுக்கு அழைத்து வந்து இந்த கோவிலில் வேண்டி கொண்டால் உங்க கணவர் சீக்கிரம் வெளியே வந்துடுவாங்க என்று சொல்கிறாள், பிறகு மீரா கோவிலுக்கு வர சீதா சொப்னாவை மீராவுக்கு அறிமுகம் செய்து வைத்து நிச்சயத்துக்கு அழைக்க மீரா அது நடக்குமானே தெரியல, எதுக்கு இதெல்லாம் என்று கேட்கிறாள்.

இதையடுத்து சீதா மீராவை தனியாக அழைத்து சென்று சொப்னா சேதுவின் இரண்டாவது மனைவி என்ற உண்மைகளை உடைக்க அவள் நம்ப மறுக்கிறாள், போட்டோ ஆதாரங்களை காட்ட மீராவும் நம்ப தொடங்குகிறாள், அடுத்து சொப்னாவை நிச்சயத்துக்கு அழைக்க அவளும் கண்டிப்பா வரேன் என்று சொல்கிறாள்.

அதனை தொடர்ந்து சீதா மதுமிதாவுக்கு போன் செய்து நாளைக்கு நீ தான் சொப்னா என்பவரை நிச்சயத்துக்கு கூட்டி வரணும் என தன்னுடைய திட்டதை சொல்கிறாள், மேலும் மது சூர்யாவை நினைத்து கண் கலங்க சீதா சூரியாவை கண்டுபிடித்து சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறாள். அடுத்ததாக சத்யனை சந்தித்து நாளைக்கு ஐயரை அழைத்து வர சொல்ல அவன் ஏன் என்று கேட்க சீதா விஷயத்தை சொல்கிறாள்.

பிறகு இரவு நேரம் ஆனதும் ரூமுக்குள் ராம் இங்கிலிஷ் புக் படித்து கொண்டிருக்க சீதா எனக்கு படித்து காட்டுங்க என்று சொல்லி அவன் படிப்பதை கேட்டு கொண்டே தூங்கி விடுகிறாள், கண்ணாடியுடன் தூங்கியதால் ராம் கண்ணாடியை கழட்ட போக சீதா எழுந்து கொள்கிறாள், அவனிடம் தனது நிச்சயதார்த்த பிளானை சொல்ல முதலில் மறுத்து பிறகு சப்போர்ட் செய்வதாக சொல்கிறான். மேலும் சேதுவும் சுபாஷும் வெளியே வரும் விஷயம் கேட்டு கோபப்படுகிறான்.

மறுபக்கம் லாயர் பெயில் கிடைத்து விட்டதாக சொல்லி ஆர்டரை மகாவிடம் கொடுக்க அவள் சந்தோசப்படுகிறாள், அடுத்து சீதாவை வெளியே துரத்தணும் என பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்