தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: மகாவுக்கு ராம் கொடுத்த அதிர்ச்சி.. வெளியே வர போகும் சீதா

Seetha Raman: மகாவுக்கு ராம் கொடுத்த அதிர்ச்சி.. வெளியே வர போகும் சீதா

Aarthi V HT Tamil
Jul 07, 2023 11:33 AM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதாவை வீட்டுக்கு கூட்டி செல்ல சூரியா வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீ என்கூட வர வேண்டாம், நான் கட்டுன தாலியை கழட்டி கொடு என்று கேட்க மதுவும் கோபத்தில் கழட்டி கொடுக்க போக தடுத்து நிறுத்துகிறார் மீரா.

தாலியை கழட்டி கொடுக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என சொல்லி சமாதானம் செய்ய மதுவும் தாலியை கழட்டாமல் மனம் மாறுகிறார். பிறகு சூர்யா எழுந்து செல்ல மதுமிதாவும் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பிறகு ஜெயிலில் இருந்து ராம் வீட்டுக்கு வர மகா எங்க போயிட்டு வர என்ன கேட்க சீதாவை பார்க்க போன விஷயத்தை மட்டும் சூர்யா மேல எந்த தப்பும் கிடையாது இந்த வீட்ல இருக்கவங்க தான் யாரும் இதை எல்லாம் பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க என்று சொல்கிறான். மேலும் அவங்க யாருன்னு இன்னும் நாலு நாள்ல தெரிஞ்சு உள்ள போயிடுவாங்க சீதா வெளிய வந்துருவா என சொல்கிறான்.

சீதா உன்ன இப்படி எல்லாம் சொல்லி நம்ப வச்சிருக்கா என மகா சொல்ல ராம் அவ முத்தாரம்மன் மேல சத்தியம் பண்ணி சொன்னா என்று சொல‌்கிறான். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மறுபக்கம் சீதாவுடன் இருக்கும் பெண்மணி நான் கோபத்துல என் மாமியார் வீட்டுக்கு இங்க வந்துட்டேன் அவளும் செத்து போயிட்டா என் வாழ்க்கையின் செத்துப் போச்சு நீயும் அந்த மாதிரி தப்பு பண்ண கூடாது, உன்னுடைய புருஷனுக்கு புரிய வைக்க பாரு என எடுத்து சொல்ல சீதா இங்கே ராமை மிஸ் செய்ய வீட்டில் ராம் சீதாவை மிஸ் பண்ணுகிறான்.

அடுத்ததாக சேது மற்றும் சுபாஷ் இருவரும் வீட்டுக்கு வர அவர்களிடம் கோபப்படும் மகா இங்க நடந்த விஷயங்களை சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய சீதாராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்