தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: உண்மையை சொல்லிய மாலினி.. சீதாவுக்கு மகா வைத்த செக்மேட்

Seetha Raman: உண்மையை சொல்லிய மாலினி.. சீதாவுக்கு மகா வைத்த செக்மேட்

Aarthi V HT Tamil
Jun 28, 2023 11:50 AM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

முதலில் மாலினி உண்மையை சொல்ல மறுக்க அதன் பின்னர் சீதா நீ உண்மையை சொன்னா தப்பித்த, இல்லனா அப்பா உன்னை கைது செய்து ஜெயில்ல போட்டுடுவாரு என மிரட்ட மாலினி மகா செய்த சதிவேலைகள் அனைத்தையும் சொல்ல இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மறுபக்கம் மகா மதுமிதாவிடம் உங்க அப்பா அம்மாவுக்கு கல்யாண நாளுக்கு வாழ்த்து சொன்னாயே என்று கேட்க அவ இன்னைக்கு கல்யாண நாள் கிடையாது, அது அடுத்த மாசம் தான் என்று சொல்ல மகா சீதா எதோ செய்ய போகிறாள் என்பதை புரிந்து குழப்பம் அடைகிறாள்.

இங்கே மாலினியிடம் இதையெல்லாம் ஸ்டேஷனலில் கேமரா முன்னாடி சொல்ல வேண்டும் என்று சொல்லி அழைத்து செல்ல அவளுக்கு பயம் அதிகமாகிறது, ஸ்டேஷனுக்கு வந்த மாலினி கான்ஸ்டேபிள் மிரட்டல்களால் இன்னும் பயந்து ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று சொல்லி உள்ளே சென்று தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள்.

அந்த நேரம் பார்த்து அவளது போன் கீழே விழ மகாவுக்கு தெரியப்படுத்தலாம் என முடிவெடுக்கிறாள், இங்கே மகாவும் மாலினியிடம் அங்கே நடப்பது என்ன என்று விசாரிக்கலாம் என போன் செய்ய போன் போகவில்லை. பிறகு மாலினி போனை ஆன் செய்து மகாவுக்கு போன் செய்து இங்கே நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி தற்கொலை செய்து கொள்ள போவதாக சொல்கிறாள்.

ஆனால் மகா உன்னை நான் காப்பாத்துறேன், நான் சொல்ற மாதிரி பேசு என்று சொல்ல மாலினி கேமரா முன்னாடி அப்படியே மொத்தமாக மாற்றி பேசுகிறாள், நான் அங்க மாலையை தான் திருடினேன், மற்றபடி எதுவும் செய்யவில்லை என்று சொல்ல சீதா, ராஜசேகர் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள், அதே சமயம் இதெல்லாம் மகாவின் வேலை தான் என்பதையும் தெரிந்து கொள்கின்றனர்.

அடுத்ததாக கான்ஸ்டேபிள் மகாவுக்கு போன் செய்து உங்கள் வீட்டில் மாலினி மாலை திருடியதாக சொல்ராங்க என்று விசாரிக்க மகா அவங்களை எதுவும் பண்ண வேண்டாம், அதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்ல மாலினியை ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்