தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seenu Ramasamy: நீ செத்த பிறகு வரும்.. பிஸ்மிக்கு பதிலடி கொடுத்த சீனு ராமசாமி

Seenu Ramasamy: நீ செத்த பிறகு வரும்.. பிஸ்மிக்கு பதிலடி கொடுத்த சீனு ராமசாமி

Aarthi V HT Tamil
Nov 06, 2023 01:00 PM IST

தன் படங்கள் பற்றி அவதூறாக பேசிய வலைப்பேச்சு பிஸ்மிக்கு, இயக்குநர் சீனு ராமசாமி பதிலடி கொடுத்து உள்ளார்.

சீனு ராமசாமி
சீனு ராமசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

இல்லை டிஜிட்டல் குப்பை என்று கூட சொல்லாம். இந்த மாதிரி சொல்லும் போது சினு ராமசாமி படங்கள் சிறந்த படங்கள் தான். சிறந்த படம் என சொல்வதில் சிலருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நிச்சயமாக சமூக நல்லிணகத்திற்கான படம்.

இந்த மாதிரியான படங்களுக்கு வணிக ரீதியாக வெற்றி கிடைக்காது. ஆனால் சீனு ராமசாமி என்ன செய்வார் என்றால் படம் ரிசல்ட் தெரிந்த பிறகும் அந்த படம் இங்க, அங்க விருது வாங்கியதாக செய்தி அனுப்புவார். ட்விட்டரிலும் ஷேர் செய்து கொண்டே இருப்பார்.

இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்து என் நண்பர் சொன்னார், இவர் செத்த பிணத்திற்கு மேக்கப் போட்டு கொண்டே இருப்பர் என சொன்னார். அது என் மனதில் நின்றுவிட்டது” என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனு ராமசாமி, " தியேட்டரில் வசூல் குறைவு தான் பிஸ்மி

ஆனால் மாமனிதன் ஆகா ஓடிடியில் வெற்றி

செத்த பொணத்தை எதுக்குப்பா மாஸ்க்கோ 45 வது திரைப்பட விழாவில் உலக நாடுகல்ல

திரையிடுறாங்க. நா பதிவிடுவது உனக்கோ உசிரு இல்லைன்னு சொன்ன ஆளுக்கோ இல்லடா. நீ செத்த பிறகு வரும் என் இளைய தலைமுறைக்கு அதுசரி ஒரு கோடி வருமானம் காட்டி income tax கட்டிட்டேயேபா கேட்டிக்காரன் தான் " எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்