Sathyaraj: தமிழ் சினிமாவின் மகா நடிகன்..கட்டப்பாவாக கொண்டாடப்படும் சத்யராஜ் மறக்க முடியாத கேரக்டர்கள்
Sathyaraj Movies: தமிழ் சினிமாவின் மகா நடிகன் ஆக இருந்து வருபவர் சத்யராஜ். கட்டப்பாவாக கொண்டாடப்பட்டு பான் இந்தியா அந்தஸ்து பெற்ற தமிழ் நடிகராக இருந்து வரும் சத்யராஜ் மறக்க முடியாத கேரக்டர்கள் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் 1970களின் இறுதியில் தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தோன்றி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையும், புரட்சி தமிழன் என்ற அடைமொழியுடன் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்திருப்பவர் சத்யராஜ். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றி, பின்னர் வில்லனாக சில படங்களில் மிரட்டி. அடுத்து ஹீரோவாகவும் பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் நெஞ்சங்களை கவர்ந்தார்.
தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதைக்கு முக்கியத்துவமான வேடங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் தொடர்ந்து நடித்து வந்த சத்யராஜ் , உலக அளவில் கவனம் ஈர்த்த பாகுபலி படம் மூலம் பான் இந்தியா நடிகராக உருவெடுத்து தற்போது தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.
தமிழ் ரசிகர்களை கடந்த கட்டப்பாவாக இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் மகா நடிகனாக இருந்து வரும் சத்யராஜ், இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சத்யராஜ் என்ற பெயரை சொன்னவுடன் நினைவுக்கு வரும் விதமாக, அவர் நடித்த மறக்க முடியாத கேரக்டர்களின் படம் இடம்பிடித்திருக்கும் ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்கள் பற்றியும் பார்க்கலாம்
அமைதிப்படை அமாவாசை
ஒரு நடிகனுக்கு, அவன் வாழ்நாளில் கிடைக்கூடிய சிறந்த கேரக்டர் என்ற பெருமைபடும் விதமாக சத்யாராஜ் நடித்து எந்த காலத்திலும் கொண்டாடப்படும் கேரக்டராக அமைதிப்படை படத்தில் அவர் நடித்திருக்கும் அமாவாசை கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
அலட்டிக்கொள்ளாத சத்யராஜ் நடிப்பு, வசன உச்சரிப்பு, அரசியல்வாதியின் குணத்தை வெளிப்படுத்தும் எதார்த்த நடிப்பு என அனைவரையும் கவர்ந்த கேரக்டராக இது அமைந்திருந்தது. மணிவண்ணன் இயக்கத்தில் எந்த காலத்திலும் ரசிக்ககூடிய கல்ட் கிளாசிக் படமாக இருக்கும் அமைதிப்படை எந்த ஓடிடி தளத்திலும் இடம்பெறவில்லை என்றாலும் யூடியூப்பில் முழு படமும் உள்ளது.
காக்கிசட்டை விக்கி
கமல்ஹாசனுக்கு பக்கா மாஸ் மசாலா படமாக அமைந்த காக்கிசட்டையில் வில்லனாக விக்கி என்ற கதாபாத்திரத்தில் தோன்று சத்யராஜ் பேசிய தகடு தகடு வசனம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது. படத்தில் கடத்தல்காரரானாகவும், ஸ்டைலிஷ் வில்லனாகவும் நடிப்பில் மிரட்டியிருப்பார் சத்யராஜ். இந்த படமும் எந்த ஓடிடியில் இல்லை என்றாலும், யூடியூப்பில் இடம்பிடித்துள்ளது
வேதம் புதிது பாலு தேவர்
பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் தனது ஒரிஜனல் வயதை காட்டிலும் அதிக வயதுடையவராகவும், நாத்திகராகவும் நடித்த இந்த கேரக்டர் அவரது நடிப்பு திறமைக்கு சான்றாக அமைந்தது. சத்யராஜ் பேசும் வசனம் ஒவ்வொன்றும் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த படம் யூடியூப்பில் உள்ளது
பாகுபலி கட்டப்பா
சத்யராஜை உலக பேமஸ் ஆக்கிய கதாபாத்திரம் பாகுபலி படத்தில் அவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம். படத்தில் பாகுபலியின் மாமாவாக தோன்றியிருக்கும் அவர், நடிப்பில் அசுரனாக மின்னியிருப்பார். குறிப்பாக இரண்டாம் பாகத்தில் பிரபாஸுடன் ஸ்க்ரீன் ஸ்பேஸை சரி பாதி ஆக்கிரமித்து தனது அபார நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார். இரண்டு பாகங்களாக வந்த பாகுபலி படத்தின் முதல் பாகம் அமேசான் ப்ரைம் விடியோவிலும், இரண்டாம் பாகம் ட்ஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் உள்ளது
நண்பன் வைரஸ்
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸ் ரீமேக்காக தளபதி விஜய் நடித்து, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தில் விருமாண்டி சந்தானம் அலைஸ் வைரஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சத்யராஜ். என்ஜினியரிங் கல்லூரியின் ஸ்டிரிக்ட் பிரன்சிபளாக தனது தனித்துவமான நடிப்பின் மூலம் கவர்ந்திருப்பார். இந்த படம் சூப்பர் ஹிட்டாவதற்கு சத்யராஜின் நடிப்பும் முக்கிய காரணமாக அமைந்தது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளது.
டாபிக்ஸ்