Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!

Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 28, 2024 10:07 PM IST

Thalapathy Vijay: “அப்போது அவருக்கு அவ்வளவுதான் கிரிக்கெட் அறிவு இருந்தது. ஆனால், அவரது பையன் சஞ்சய்க்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். நாங்கள் நடத்திய சிசிஎல் போட்டிக்கும் இரண்டு, மூன்று முறை வந்தார். அவர் தந்த ஆதரவு மிகப்பெரியது.” - நடிகர் ஜீவா!

Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது..  பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்”  - ஜீவா!
Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!

இது குறித்து அவர் பேசும் போது, “விஜய் சாருக்கு அப்போது கிரிக்கெட்டெல்லாம் பெரிதாக தெரிகிறது. முதல் முறையாக ஐபிஎல் மேட்ச் நடக்கும் போது நான் அவருடன் இருந்தேன். அப்போது ஒரு பால் பவுண்டரி சென்றது. அப்போது அவர் பவுண்டரி என்றால் 4 ரன்களா? 6 ரன்களா என்று கேட்டார். அதைக்கேட்ட போது அண்ணா நீங்கள்தான் இதற்கு அம்பாசிடர் நீங்களே இப்படி சொல்லலாமா என்று கேட்டேன். அப்போது அவருக்கு அவ்வளவுதான் கிரிக்கெட் அறிவு இருந்தது. ஆனால், அவரது பையன் சஞ்சய்க்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். நாங்கள் நடத்திய சிசிஎல் போட்டிக்கும் இரண்டு, மூன்று முறை வந்தார். அவர் தந்த ஆதரவு மிகப்பெரியது.” என்று பேசினார்.

 

கடைசியாக, நடிகர் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் பெரும் ஆரவாரத்திற்கும் கொண்டாட்டங்களுக்கும் மத்தியில் வெளியான திரைப்படம், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப்படம் 23 நாட்களில் உலகளவில் ரூ. 447 கோடி வரை வசூல் செய்துள்ளது. விஜய்யின் கேரியரில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இரண்டாவது திரைப்படமும் இதுவே ஆகும். இந்தப்படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

தளபதி 69 குறித்து எச். வினோத்

இதையடுத்து இந்த படம் குறித்து சென்னையில் நடைபற்ற மகுடன் திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் இயக்குநர் எச். வினோத் பேசினார். அப்போது, " நாங்கள் இந்த படத்தில் கமிட் ஆனவுடன். விஜய் முதலில் என்னிடம் இந்த படம் அனைத்து வயதினரும் பார்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்றார். எனவே இந்த படம் எந்தவொரு அரசியல் தலைவரையும், அரசியல் காட்சியையும் தாக்காமல் இருக்கும்.

அதே சமயம் முழுக்க கமர்ஷியல் விஷயங்கள் நிறைந்திருக்கும். எனவே கொஞ்சம் அரசியல், அதிக மாஸ் என 200% விஜய் பேன்ஸ் படமாக இருக்கும்." இதன் மூலம் தளபதி 69 குறித்த முதல் அப்டேட்டை அதன் இயக்குநர் எச். வினோத் மேடையில் வைத்து வெளிப்படுத்தியுள்ளார்.

ஹீரோயின் யார்?

கோட் ரிலீஸுக்கு பிறகு அக்டோபர் மாதம் இந்த படத்தின் பணிகள் தொங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஹீரோயினாக சமந்தா மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கேவிஎன் புரொடக்டன் படத்தை தயாரிக்கிறது. 

இந்தப்படத்தை தொடர்ந்து முழு நேர அரசியல் வாதியாக மாறுகிறார் விஜய். அவரின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு தேதி குறித்த அறிவிப்பை அறிவிப்பு அண்மையில் வெளியானது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும், பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழக கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம்.

கொள்கைளை விளக்கும் முதல் மாநாடு

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்ககூடிய நமது கழகத்தின் கொள்கை தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆ் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு நம்மை வழிநடத்தப்போகும் கொள்கைகளையும் நாம் அடைய போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது

வலிமையான அரசியல் பாதையை அமைப்போம்

தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட்ட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்.

நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழ்நாடு மண்ணை சேர்ந்த மகனாக ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் ஆதரவையும் ஆசிகளைும் உரிமையுடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு விஜய் அதில் தெரிவித்திருந்தார். 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.