Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை

Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Sep 22, 2024 07:54 PM IST

வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி அடித்து உருவாகும் படம். அதன் புத்தக உரிமை பெற்றிருக்கும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது உரிமையின்றி நாவல் காட்சிகளை படமாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை
Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை

இந்த படத்தை தொடர்ந்து நேரடி தெலுங்கு படமாக இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் படம் கேம் சேஞ்சர். ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், சமுத்திரகனி, பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இயக்குநர் ஷங்கர் பிஸியாக உள்ளார்.

வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி

தமிழில் பிரபல வார இதழில் வெளியான, எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான சு. வெங்கடேசன் எழுதிய வேல்பாரி என்ற நாவலில் காப்புரிமையை இயக்குநர் ஷங்கர் பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்துக்கு பின்னர் வேள்பாரி கதையை படமாக்குவது குறித்து அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நாவலை மூன்று பாகங்களாக அவர் உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.

வரலாற்று நாயகனாக திகழும் வேல்பாரி பற்றி உண்மையும், கற்பனையும் கலந்த கதையாக இருக்கும் வேல்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி அடித்து சமீபத்தில் வெளியான படங்களின் ட்ரெய்லர் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.

இந்த காட்சிகளுக்கு ஆட்சோபனை தெரிவித்திருக்கும் இயக்குநர் ஷங்கர், இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை

வேல்பாரி நாவல் காப்பி தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அனைவரின் கவனத்துக்கும்! சு. வெங்கடேசனின் தமிழ் நாவலான "வீர யுக நாயகன் வேல் பாரி", பதிப்புரிமை முறையாக நான் பெற்றுள்ளேன். இந்த நாவல் முக்கிய சம்பவங்கள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு பல படங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைக் கண்டு வருத்தமடைந்துள்ளன்.

சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் ட்ரெய்லரில் நாவலின் முக்கியமான காட்சியைப் பார்த்ததில் மிகவும் வருத்தமளிக்கிறது.

திரைப்படங்கள், வெப்சீரிஸ் மற்றும் எந்த ஊடகத்திலும் நாவலின் காட்சிகளைப் பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்க்கவும். படைப்பாளிகளின் உரிமைகளை மதிக்கவும். காட்சிகளின் அங்கீகரிக்கப்படாத தழுவல்களைத் தவிர்க்கவும். இதை மீறுபவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்" என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் இந்த பதிவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேல்பாரி காட்சி இடம்பிடித்திருக்கும் படம் எது?

இயக்குநர் ஷங்கரின் இந்த பதிவை தொடர்ந்து சமீபத்தில், எந்த படத்தில் வேல்பாரி காட்சிகள் இடம்பிடித்திருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் டீகோட் செய்ய தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் வெளியான வரலாற்று ஆக்‌ஷன் பட ட்ரெய்ராக ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா, சூர்யா நடித்த கங்குவா ஆகிய படங்கள் உள்ளன.

இதில் கங்குவா படம் தொடங்கும் முன்னரே சேர மண்ணில் வாழ்ந்த மன்னரான பாரி பற்றிய கதை, வேல்பாரி பற்றி கதை என கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தேவரா படம் மிக பெரும் பொருள் செலவில் உருவாகி வந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியானது.

இதில் ஜூனியர் என்டிஆர் கடல் அருகே உள்ள ஊர் ஒன்றின் தலைவனாக சித்தரிக்கப்படும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. வேல்பாரி நாவலிலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பிடித்துள்ளன. எனவே ஷங்கர் குறிப்பிடுவது தேவரா படத்தைத்தான் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேவரா ரிலீஸ்

தெலுங்கில் உருவாகி இருக்கும் தேவரா திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் மூலம் பாலிவுட் இளம் நடிகையும், மறைந்த முன்னாள் ஹீரோயின் ஸ்ரீதேவி மகளுமான ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.