Tamil News  /  Entertainment  /  Alva Gives New Moon An Mla In The Chola Lineage' Was A Formidable Peacemaker

Amaidhi Padai: 'அல்வா கொடுக்கும் அமாவாசை.. சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ' அசராத அமைதிப்படை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 13, 2024 05:15 AM IST

மணிவண்ணன் சத்யராஜின் நெருங்கிய நண்பர். சத்யராஜ் காம்பினேஷனில் அதிக படங்களை இயக்கியவர். இருவரும் சேர்ந்தாலே வசனங்கள் அனல் பறக்கும். நக்கல் நையாண்டிக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் இது அரசியல் சப்ஜெக்ட். ஒரே லூட்டியும் லொள்ளுமாம் படம் நெடுக அரசியலை புரட்டி எடுக்கும் நையாண்டி சித்திரம்.

அமைதிப்படை
அமைதிப்படை

ட்ரெண்டிங் செய்திகள்

சத்யராஜ் அமாவாசை மற்றும் காவல் ஆய்வாளர் என்ற இரண்டு வேடங்களில், படத்தை இயக்கிய மணிவண்ணன் முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறனாக, ரஞ்சிதா குயிலியாக, கஸ்தூரி தாயம்மாவாக, சுஜாதா சிவகாமியாக நடித்தனர். இவர்களோடு மலேசியா வாசுதேவன், எஸ். எஸ். சந்திரன், காந்திமதி, சுந்தர் ராஜன், தியாகு, சரஸ்வதி என்று பெரிய நடிகர்கள் பட்டாளமே இருந்தது.

மணிவண்ணன் சத்யராஜின் நெருங்கிய நண்பர். சத்யராஜ் காம்பினேஷனில் அதிக படங்களை இயக்கியவர். இருவரும் சேர்ந்தாலே வசனங்கள் அனல் பறக்கும்.  நக்கல் நையாண்டிக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் இது அரசியல் சப்ஜெக்ட். ஒரே லூட்டியும் லொள்ளுமாம் படம் நெடுக அரசியலை புரட்டி எடுக்கும் நையாண்டி சித்திரம்.

கோயிலில் தேங்காய் பொறுக்கி கொண்டு வயிற்று பிழைப்பு ஓட்டுகிற அமாவாசை என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் குறும்புத்தனமான ஆளாக நடித்து இருப்பார். அவனை மணிமாறன் எம்.எல்.ஏ. தனது கையாளாக வைத்திருப்பார். அந்த நேரம் வந்த தேர்தலில் தான் சார்ந்த கட்சி தனக்கு சீட் தராத கோபத்தில் அமாவாசை யை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைப்பார். பதவி வந்ததும் தான் விரும்பிய பெண் தாயம்மாவாக வரும் கஸ்தூரி யை ஏமாற்றி விட்டு அந்த ஊரில் உள்ள அரண்மனை வீட்டுக்கார பெண் சுஜாதா வை மணந்து கொள்ள மனமுடைந்த தாயம்மா ஆண் குழந்தையை பிரசவித்து விட்டு இறந்து போகிறார். அந்த பையன் தான் தங்கவேலு என்ற பாத்திரத்தில் காவல் அதிகாரி ஆக மாறி தனது தந்தையை பழிவாங்குவதும் தனி ட்ராக்.

படத்தின் நாடித்துடிப்பே அமாவாசை கதாபாத்திரம் எம்.எல்.ஏ. ஆன பிறகு வரும் ஒவ்வொரு சீனும் சரவெடிதான். அதிலும் தன்னை பதவிக்கு வர வைத்த மணிவண்ணனை படுத்தும் பாடு இருக்கே.... எந்த காலத்திலும் பொருந்திப் போகும் அரசியல் வசனங்களை போகிற போக்கில் நடிகர் 'சோ' பாணியில் அள்ளி தெறிப்பார்கள் சத்யராஜும் மணி வண்ணனும். சத்யராஜ் மைக்கை பிடித்தாலே ரகளைதான். அதேபோல் சத்யராஜ் அல்வா கொடுத்து ஏமாற்றும் விதமும் தனி. இப்படி யான அமாவாசை என்ற அல்லக்கை எடுபிடியான சத்யராஜ் தான் எம்.எல்.ஏ. தான் தனது தந்தை என்று கண்டறிந்து சந்தர்ப்பம் பார்த்து மகன் சத்யராஜ் பழி வாங்குவதோடு முடிகிறது கதை. இளையராஜா இசையில் 'சொல்லி விடு வெள்ளி நிலவே' மெலடியின் உச்சம். பல இடங்களில் பின்னனி இசை காட்சிகளின் உணர்வை நமக்குள் கடத்துவது தனி சிறப்பு. இந்த படத்தை ரசிகர்கள் பல தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாட வைத்தனர். இந்த வெற்றி யை மனதில் வைத்து 2013 ல் எடுத்த இரண்டாவது பாகம் பெரிய வெற்றி பெற வில்லை. அமைதிப்படை இரண்டாவது பாகத்தை கடைசியாக இயக்கி விட்டு காலமானார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் வந்த படத்தில் வரும் வசனங்கள் சமகால அரசியல் மட்டும் அல்லாமல் எக்காலத்திலும் பொருந்திப் போனது தான் மிகப்பெரிய வெற்றி. இருவர் கூட்டணியில் வரும் நக்கலும், நையாண்டியும், லொள்ளுமாய் படத்தை அதகளப்படுத்தி விட்டு படத்தின் பெயரை மட்டும் அமைதிப்படை என்று வைத்தால் எவ்வளவு சேட்டை பாருங்க. அதுதான் படத்தின் வெற்றி..  சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ' அசராத அமைதிப்படை அது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.