Saripodhaa Sanivaaram OTT: வில்லத்தினத்தில் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா..நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை ஓடிடி ரிலீஸ்-saripodhaa sanivaaram ott release here when and where you can watch nani action thriller movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Saripodhaa Sanivaaram Ott: வில்லத்தினத்தில் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா..நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை ஓடிடி ரிலீஸ்

Saripodhaa Sanivaaram OTT: வில்லத்தினத்தில் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா..நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை ஓடிடி ரிலீஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 22, 2024 06:35 PM IST

Saripodhaa Sanivaaram OTT Release: மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை. வில்லத்தனத்தில் எஸ்.ஜே. சூர்யா மிரட்டிய இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் பெய்த மழை காரணமாக வசூலை குவிக்க தவறிய இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகிறது.

Saripodhaa Sanivaaram OTT: வில்லத்தினத்தில் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா..நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை ஓடிடி ரிலீஸ்
Saripodhaa Sanivaaram OTT: வில்லத்தினத்தில் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா..நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை ஓடிடி ரிலீஸ்

தெலுங்கு தவிர தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியானது. தமிழில் படம் சூர்யாவின் சனிக்கிழமை என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி ரிலீசானது.

ஓடிடி ரிலீஸ்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் எஸ். ஜே. சூர்யா கொடூரமான போலீஸ் இன்ஸ்பெக்டராக வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார்.

தமிழில் பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் எஸ்.ஜே. சூர்யா நடிப்புக்காக பலரும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்நோக்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 26ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சொதப்பல்

இந்த படம் வெளியான காலகட்டத்தில் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் படத்தின் வசூலும் வெகுவாக பாதிக்கப்பட்டது. படம் ரூ. 90 கோடி செலவில் உருாவானது என கூறப்படும் நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 100 கோடி கூட எட்டவில்லை என சொல்லப்படுகிறது.

சனிக்கிழமை படத்தின் கதை

சனிக்கிழமை படக் கதை சூர்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் நானியை மையப்படுத்தி அமைந்துள்ளது. தனது டீன் ஏஜ் வயதில் இருந்து முன் கோபம் அடையும் நபராக இருந்து வருகிறார் நானி. அவரது அம்மா இந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார்.

சனிக்கிழமை நாளில் அவனது தாயார் இறந்து விட சில மோசமான விளைவுகளால், மற்ற நாள்களில் கோபத்தை அடக்கி அமைதியானவராகவும், சனிக்கிழமை மட்டும் மட்டும் தனது கோபத்தை, முரட்டுதனத்தை வெளிப்படுத்துபவராகவும் இருக்கிறார்.

இதன் விளைவில், மற்றொரு கோபக்கார போலீசான எஸ்.ஜே. சூர்யா - நானி இடையே மோதல் ஏற்படுகிறது. இதன் பின்னர் இருவருக்கும் இடையிலான மோதல் மற்றும் அதன் பின்விளைவுகள் விறுவிறுப்பான திருப்பங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.

வில்லத்தனத்தில் மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா

தமிழில் தனது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான குஷி படத்தின் தெலுங்கு பதிப்பின் மூலம் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா. அதன் பின்னர் நியூ தெலுங்கு ரீமேக் நானி, புலி ஆகிய படங்களை தெலுங்கில் இயக்கினார்.

இதைத்தொடர்ந்து மகேஷ்பாபு நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியான ஸ்பைடர் படத்தில் வில்லனாக தோன்றி நடிப்பில் மிரட்டியிருப்பார்.

இந்த படத்துக்கு பின்னர் தற்போது சூர்யாவின் சனிக்கிழமை படம் மூலம் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். வழக்கம்போல் தனது வில்லனத்தனமான நடிப்பை இந்த படத்திலும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பிரியங்கா மோகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அத்துடன் நானிஸ் கேங் லீடர் படத்துக்கு பின்னர் நானி - பிரியங்கா மோகன் ஆகியோர் இரண்டாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.