SJ Suryah Latest speech: தனுசுக்கு உடம்புல 10 கிலோ சதைதான்.. ஆனா மூளை வெயிட் ஓவர் - எஸ் ஜே சூர்யா
SJSuryah Latest speech: “அங்கு செல்வராகவன் எனக்கு சொல்லிக் கொடுத்த பார்முலா 44 யை இங்கு அப்ளை செய்தேன். அழகாக பொருந்தி போய்விட்டது..ஆனால் பாருங்கள், செல்வராகவன் அந்த பார்முலா 44 யை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டார்” - எஸ் ஜே சூர்யா
ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் எஸ் ஜே சூர்யா," செல்வராகவன் சொன்னது போல ஏ ஆர் ரகுமான் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். ஒருமுறை பாம்பேவில் அஹமத் கான் என்பவரிடம், நான் ஒரு பாடலுக்கான சிச்சுவேஷனை விளக்கிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், என்னை எப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தெரிந்து கொண்டார் என்பதை ஒரு பகிர்ந்து கொண்டார்.
முகம் சுளிக்காத மனிதர்
ஏ ஆர் ரகுமானுடன் அவர் ஒருமுறை இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த ஒருவர் ரகுமானிடம் உங்களைப் பார்க்க, எஸ் ஜே சூர்யா என்ற ஒருவர் வந்திருக்கிறார் என்று கூறினார். அதைக் கேட்ட ஏ ஆர் ரகுமான் ... ஐயோ அவரா என்று அலட்டிக்கொண்டார். அப்படித்தான் உங்களது அறிமுகம் எனக்கு கிடைத்தது என்று அவர் கூறினார்.
ஏ ஆர் ரகுமான் சாரை, நான் அவ்வளவு டார்ச்சர் செய்து இருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அவர் என்னிடம் முகம் சுளித்து பணியாற்றியது கிடையாது. துளிகூட அவருக்கு ஈகோ கிடையாது. இந்த படத்தில் நமக்கு இரண்டு சாவித்திரிகள் கிடைத்திருக்கிறார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு துஷாராவும் , அபர்ணாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக துஷாரா படத்திற்காக நிஜமான கண்ணாடியை உடைத்திருக்கிறார். அவரது சில சீன்களை நான் பார்த்தேன். அதைப் பார்க்கும் பொழுது எனக்கு பிரமிப்பாக இருந்தது
செல்வராகவனின் ஃபார்முலா 44
செல்வராகவன் எனக்கு நெஞ்சம் மறப்பதில்லை படத்தை கொடுத்தார். அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. தனுஷின் டைரக்ஷனில் நடிப்பதற்கு எனக்கு கொஞ்சம் எளிதாகவே இருந்தது. காரணம் என்னவென்றால், நான் முன்னமே செல்வராகவன் சாரிடம் பணியாற்றியதுதான். அங்கு செல்வராகவன் எனக்கு சொல்லிக் கொடுத்த பார்முலா 44 யை இங்கு அப்ளை செய்தேன்.
அழகாக பொருந்தி போய்விட்டது..ஆனால் பாருங்கள், செல்வராகவன் அந்த ஃபார்முலா 44 யை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டார். இதனால் செட்டில் பயங்கரமாக தடுமாறினார். பிரகாஷ் சார் தனுஷை இப்போது பார்த்தால், திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் அவரைப் பார்த்து 10 கிலோ சதை என்று சொன்ன டயலாக் ஞாபகம் வருவதாக சொன்னார். தனுஷிற்கு உடம்பில் 10 கிலோ சதை தான். ஆனால் மூளை ஒரு லட்சம் வெயிட்.. இதயம் ஜீரோ வெயிட்... அதனை மட்டும் மிகவும் லைட்டாக வைத்திருக்கிறார். பறவை போல் அது இருக்கிறது
படம் வேற மாறி வந்துள்ளது
இயக்குநர் தனுஷ், ராமாயணம், மகாபாரதம் கதையை 2.20 நிமிடத்தில் சொல்லும் விதமாக ராயன் படத்தை எடுத்து விட்டார். பிரமாதமாக இயக்கி இருக்கிறார். இந்த சின்ன வயதில், எப்படி இதை செய்தார் என்று தெரியவில்லை. தனுஷ் எல்லா இயக்குநர்களிடமிருந்தும் சின்ன சின்ன விஷயங்களை கற்றுக் கொண்டே வந்திருக்கிறார் அவருக்கு அந்த பசி எப்போதுமே இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அதனால் தான் அவரால் இப்படி வேலை செய்ய முடிகிறது " என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்