தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Saranya Ponvannan: கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை பண்ணமாட்டேன்.. கறார் காட்டும் சரண்யா பொன்வண்ணன்

Saranya Ponvannan: கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை பண்ணமாட்டேன்.. கறார் காட்டும் சரண்யா பொன்வண்ணன்

Aarthi V HT Tamil
Dec 11, 2023 11:50 AM IST

நடிகை சரண்யா பொன்வண்ணன் சினிமாவிற்காக தான் இந்த ஒரு விஷயத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என கூறினார்.

சரண்யா பிறந்தநாள்
சரண்யா பிறந்தநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் நடிகை சரண்யா பொன்வண்ணன் சினிமாவிற்காக தான் இந்த ஒரு விஷயத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என கூறினார்.

அவர் பேசுகையில், “ நான் சினிமாவிற்காக ஒரு விஷயத்தை மட்டும் விட்டு கொடுக்கவே மாட்டேன். 10 மணிக்கு எல்லாம் எனக்கு தூக்கம் வந்துவிடும். அதை நான் தியாகம் செய்யவே மாட்டேன். எந்த படமாக இருந்தாலும், எந்த நடிகராக இருந்தாலும் இதை மட்டும் நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். இரவு 10 மணிக்கு உறங்கி, காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். இந்த மாதிரியான நல்ல தூக்கம் காரணமாக நிறைய நல்ல பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன்.

இரவு ஷூட் என்றால் வரவே இல்லை என சொல்லிவிடுவேன். அதையும் மீறி செய்தால் அந்த படம் சொதப்பல் ஆகிவிடும். அதனால் இரவு படப்பிடிப்பு என்றால் வேண்டாம் என திட்டவட்டமாக சொல்லிவிடுவேன் “ என்றார்.

இன்றைய தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களின் அம்மா என்றால் உடனே நியாபகத்திற்கு வருபவர் சரண்யா. இவரின் நடிப்பு இயல்பாக இருக்கும் என்பதல் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.  குறும்புத்தனம், பாசம், செண்டிமென்ட் என நிஜ அம்மா போல் நவரசங்களையும் அள்ளிக் கொடுத்து பல படங்களிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இவரது ஆடி போய் ஆவணி வந்தால் டாப்புக்கு வந்துருவான் என்கிற வசனம் மீம் மெட்டீரயலாகவும், சமூக வலைத்தளங்கள், ஏன் நிஜ வாழ்க்கையிலும் பலரும் அதிக பயன்படுத்தும் வார்த்தையாகவும் இருந்து வருகிறது.

மணிரத்னத்தின் நாயகன் என்ற படத்தில் கமலுக்கு ஜோடியாக திரை உலகில் அறிமுகமானார் சரண்யா.

பசும்பொன் உள்ளிட்ட படங்களில் இவரும், பொண்வண்ணனும் சேர்ந்து நடித்தாலும், இருவரின் கதாபாத்திரமும் வெவ்வேறு திசையில் இருந்தது. முதலில் காதலில் சிக்கியவர் பொன்வண்ணன் தான். ஒரு தலையாக சரண்யாவை காதலிக்கத் தொடங்கினார். 

நடிகரும், இயக்குனநமான பொன்வண்ணனை மணந்தவர் சரண்யா. 1995 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. சரண்யா மற்றும் பொன்வண்ணனின் குழந்தைகள் பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்