தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: இளம் சிட்டாக சமந்தா! பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தில் கியூட் லுக்கில் குவியும் லைக்ஸ்

Samantha: இளம் சிட்டாக சமந்தா! பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தில் கியூட் லுக்கில் குவியும் லைக்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 25, 2023 11:38 AM IST

சிட்டடெல் ப்ரீமியர் காட்சியில் பிளாக் கலர் ஸ்கர்ட் அணிந்த க்யூட் லுக்கில் கடந்த வாரம் ட்ரெண்டானார் நடிகை சமந்தா. இப்போது பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் தனது 16 வயதில் எடுத்த போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ஹார்ட்டுகளை குவித்து வருகிறார்.

இளம் சிட்டாக இருந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகை சமந்தா
இளம் சிட்டாக இருந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகை சமந்தா

ட்ரெண்டிங் செய்திகள்

தெலுங்கில் யே மாயா செய்சாவா, தமிழில் பானா காத்தாடி ஆகிய படங்களின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சமந்தா. இந்த இரண்டு படங்களும் 2010இல் வெளியாகின. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு விளம்பர படங்களில் தோன்றியுள்ள சமந்தா, மாடலிங்கிலும் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து தனது 16 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து, தனது நினைவலைகளை திரும்பு பார்த்து, ரசிகர்களையும் பார்க்க வைத்துள்ளார்.

பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படமான அதில், பிரின்டட் ஷாட்ர் டிர்ஸ், வெள்ளை நிற ஷ்ரக் அணிந்து சோபாவில் கேஷுவலாக அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் 16 வயதில் நான் என குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த த்ரோபேக் புகைப்படத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஹார்ட் எமோஜியுடன் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

சமந்தா தற்போது விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஹாலிவுட் டிவி தொடரான சிட்டடெல் ரீமேக்கில் நடிக்கிறார்.

சிட்டடெல் ஹாலிவுட் தொடரில் கதையின் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். கதையின் நாயகனாக ரிச்சட்ர் மேடன் நடித்துள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியாக வரவேற்பை பெற்ற நிலையில், ஏப்ரல் 28 முதல் ஸ்டீமிங் ஆகவுள்ளது.

இந்த தொடரின் ரீமேக்கில் சமந்தா கதையின் நாயகியாகவும், பாலிவுட் நடிகர் வருண் தவான் கதாநாயகனாகவும் நடிக்கிறார்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் சிட்டடெல் ரீமேக்கை பேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ்-டிகே இயக்குகிறார்கள். இந்த தொடர் அமேசான் ப்ரைம் விடியோவில் ஸ்டீமிங் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டடெல் தொடரில் ஹாலிவுட் பதிப்பு ப்ரீமியர் ஷோ லண்டனில் நடைபெற்றது. இதில் இந்த தொடரின் இந்திய பதிப்பை உருவாக்கும் குழுவினரும் பங்கேற்றனர். நடிகை சமந்தாவும் ப்ளாக் நிற ஸ்கர்ட் அணிந்து மிகவும் கியூட்டான லுக்கில் சிட்டடெல் பிரீமியர் ஷோவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் கடந்த வாரம் முழுவதும் வைரலானது.கோலிவுட், டோலிவுட் என கலக்கி வந்த நடிகை சமந்தா தற்போது சர்வதேச நடிகையாக மாற இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்