தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rrr Screening At Ace Hotel In Los Angegles Us

RRR Movie: அமெரிக்காவில் ஆர்ஆர்ஆர்க்கு உற்சாக வரவேற்பு – ராம் சரண் பெருமிதம்

Priyadarshini R HT Tamil
Mar 03, 2023 01:47 PM IST

Screening in America: ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ள ராம் சரண் தேஜா, அண்மையில் அமெரிக்காவில் நடந்துள்ள அந்தப்படத்தின் திரையிடலை மக்கள் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிகப்படியான மகிழ்ச்சியான உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

ரசிகர்களின் உற்சாகத்தின் மத்தியில் ராம் சரண் தேஜா எடுத்துக்கொண்ட செல்பி.
ரசிகர்களின் உற்சாகத்தின் மத்தியில் ராம் சரண் தேஜா எடுத்துக்கொண்ட செல்பி.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ள ராம் சரண் தேஜா, அண்மையில் அமெரிக்காவில் நடந்துள்ள அந்தப்படத்தின் திரையிடலை மக்கள் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிகப்படியான மகிழ்ச்சியான உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

நடிகர் ராம் சரண் தேஜா, அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஆர்ஆர்ஆர் படத்தின் திரையிடலில் மக்கள் உற்சாகத்துடன் பார்க்கும் செல்பியை பகிர்ந்துள்ளார். படத்தின் திரையிடல் லாஸ் ஏஞ்சல்சில் உள்ளது. அவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தின் அகாடமி விருது 2023க்கான பிரமோஷன் பணிகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு பகுதியாக படத்தின் திரையிடலின்போது அவர் எடுத்துக்கொண்ட செல்பியை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துகொண்டு, படத்திற்கு ரசிகர்களிடம் உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. என்று பகிர்ந்துள்ளார்.

ராம் சரண் தேஜாவின் பகிர்வு
ராம் சரண் தேஜாவின் பகிர்வு

ராம் சரணை தவிர, ஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமௌலி, இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி மற்றும் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் அந்த திரையிடலில் கலந்துகொண்டுள்ளார்கள். திரையிடலை தொடர்ந்து கேள்வி, பதில் பகுதியும் நடைபெற்றது. “என்ன ஒரு உற்சாசமான வரவேற்பு ஏஸ் ஹோட்டலில், உங்களிடம் இருந்து இன்று பெற்ற இந்த பாராட்டு (Standing ovation) எனது நினைவுகளில் எப்போதும் நிறைந்திருக்கும். உங்களுக்கு எனது நன்றிகள்“ என்று டிவிட் செய்துள்ளார்.

இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டுள்ள ஒரு பதிவர், “ஹாலிவுட்டின் மிகவும் பிடித்தமான இந்திய திரைக்கலைஞர் நீங்கள்“ என்று தெரிவித்துள்ளார். ஹாலிவுட் ரசிகர்கள் உங்களுக்கு standing ovation கொடுத்துள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளது“ என்று ஒருவர் டிவீட் செய்துள்ளார். மற்றொரு டிவிட்டர் பயனளாளர், நிச்சயாமாவே அது நன்றாக இருக்கிறது. மகிழ்ந்திருங்கள். சர்வதேசளவிலான மெகா ஸ்டார் நீங்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக ராம்சரண் தேஜா, அகாடமி விருதுகளுக்காக தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வந்துகொண்டிருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் ஆஸ்கரில் சிறிந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் உள்ளது. நாட்டு நாட்டு பாடல் ஒரு சர்வதேச நிகழ்வாக உள்ளதுடன், கடந்த சில மாதங்களாக இந்த பாடலுக்கு வெளிநாட்டவர் ஆடும் நடனம் சமூக வலைதளங்களில் விரவிக்கிடந்தது.

ஏபிசிக்கு அவர் அண்மையில் கொடுத்த பேட்டியில், இந்த பாடல் எப்படி பிரபலமானது என்றும், இந்த நாட்டு நாட்டு பாடலுக்கு உலகளவில் எப்படி அங்கீகதட் கிடைத்தது என்பது குறித்தும் பேசியிருந்தார். நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதுகிடைத்தால் அதற்கு நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுவீர்கள் என்ற கேள்விக்கு, “நான் நம்புவேன் என்றே நான் நினைக்கவில்லை. அருகில் இருப்பவர்கள் என்னை தட்டி எழுப்பி விருது மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது நான் தான் இந்த பிரபஞ்சத்திலே மிக்க மகிழ்ச்சியுடையவனாக இருப்பேன். நான் அதை எங்களின் வெற்றியாக எண்ண மாட்டேன். இந்திய திரையுலகின் வெற்றியாகத்தான் பார்ப்பேன். எங்கள் யாருக்கும் அதற்கான பெருமை கிடையாது. அது எங்கள் இந்திய திரையுலகின் பெருமை“ என்றார்.

கடந்தாண்டு மார்ச்சில் இப்படம் வெளியானது. 1920களில் இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் நடைபெற்ற கதையை அடிப்படையாகக்கொண்டு ஆர்ஆர்ஆர் திரைப்படம் எடுக்கப்பட்டது. அந்தப்படத்தில் வரும் இரண்டு பேரும் உண்மையில் இருந்தவர்கள். அவர்கள் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டவர்கள். அவர்களின் உண்மை கதையின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டது. தியேட்டரில் இப்படம் கிட்டத்தட்ட 1,000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆஸ்கர் 2023க்கு முன்னதாக இப்படம் அமெரிக்காவில் மார்ச் 3ம் தேதி திரையிடப்பட்டது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்