"அந்த கொடுப்பினைதான் எனக்கு இல்லையே.. இப்ப வரைக்கும் தனியாத்தான்" - செல்வராகவன் புலம்பல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "அந்த கொடுப்பினைதான் எனக்கு இல்லையே.. இப்ப வரைக்கும் தனியாத்தான்" - செல்வராகவன் புலம்பல்

"அந்த கொடுப்பினைதான் எனக்கு இல்லையே.. இப்ப வரைக்கும் தனியாத்தான்" - செல்வராகவன் புலம்பல்

Kalyani Pandiyan S HT Tamil
Nov 23, 2024 11:53 AM IST

நட்பு அமையும் கொடுப்பினையே தனக்கு இல்லை என்றும் இப்ப வரைக்கும் தனியாகத்தான் இருக்கிறேன் என்றும் செல்வராகவன் புலம்பல்

அந்த கொடுப்பினைதான் எனக்கு இல்லையே.. இப்ப வரைக்கும் தனியாத்தான்" - செல்வராகவன் புலம்பல்
அந்த கொடுப்பினைதான் எனக்கு இல்லையே.. இப்ப வரைக்கும் தனியாத்தான்" - செல்வராகவன் புலம்பல்

நட்பு வட்டம் இல்லை

இது குறித்து லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர்," நட்பு வட்டாரம் என்பது எனக்கு சிறுவயதிலிருந்தே அமையவில்லை. உண்மையில் சொல்லப்போனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று நினைக்கிறேன். ஊட்டியில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ரூம் போட்டு ஜாலியாக இருப்பதை பார்க்கும் பொழுது, நாம் இதையெல்லாம் மிஸ் செய்து விட்டோமோ என்று நினைப்பதுண்டு.

அதற்கான காரணம், நான் எப்போதுமே வேலை வேலை என்றே இருந்து விட்டேன். வேலைதான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. இனி ஒன்றும் செய்ய முடியாது; இனிமேல் நான் யாரை போய் நட்பு பாராட்டுவது. நிறைய நண்பர்கள் வாரத்திற்கு ஒருமுறை சந்தித்துக் கொண்டு பேசுகிறார்கள்;ஜாலியாக இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் தனியாகத்தான் உட்கார்ந்து இருக்கிறேன்.

 அவர்களை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. என்னுடைய மகன் ரிஷிதான் தற்போது எனக்கு உற்ற நண்பனாக இருக்கிறான். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவனிடம் சென்று விடுவேன். முதல் இரு குழந்தைகளுக்கும் என்னால் அவ்வளவு நேரத்தை செலவிட முடியவில்லை. அதனால், இவனுடனான நேரத்தை மிஸ் செய்யக்கூடாது என்று நினைத்துதான் இந்த பிரேக்கை எடுத்துக்கொண்டேன்.

மனைவிக்கும் விருப்பு வெறுப்பு இருக்கும்

அதேபோல கல்யாண விஷயத்திலும், ஒரு பெண் நம்மை கல்யாணம் செய்து கொள்கிறார் என்றால், அவரை நாம் மிகவும் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறோம். அவர்களுக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. அவர்கள் என்றாலே இந்தெந்த வேலைகள்தான் செய்வார் என்று நினைக்கிறோம். இந்த நினைப்பானது முதலில் மாற வேண்டும். அதை நான் இப்போதுதான் புரிந்து கொள்கிறேன். இது கொஞ்சம் காலதாமதம்தான்; ஆனாலும் நான் புரிந்து கொண்டு நடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்." என்று பேசினார்.

ஆன்மிக நாட்டம் குறித்து முன்னதாக பேசிய செல்வராகவன்,"

 உண்மையான குரு என்பவங்க, நீங்கள் தேடிப்போக வேண்டாம். அவரே உங்களைத் தேடி வருவார். உங்கள் மீட்டிங் தானாக நடக்கும். டிவியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் காது பக்கத்தில் வைச்சுக்கிட்டு, நான் உங்களுக்கு தியானம் சொல்லித்தர்றேன்னு சொல்றது எல்லாம் சொல்லமாட்டாங்க. முதன்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்திக்கவே மாட்டாங்க. என்னங்க.. நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க, தியானம் பண்றதுக்கு. நான் உங்களுக்கு ஒன்று சொல்றேன்.

தியானம் தான் உலகத்திலேயே ஈஸியான விஷயம். உலகத்தில் இருக்கிற எல்லாமதங்களும் போதிக்கிறது, நம் கடவுள் நம்முடன் இருக்கிறான் அப்படிங்கிறதுதான். உலகத்திலேயே ஈஸியான விஷயம் என்றால், நம் ஈகோ தன்னால் ஒத்துக்குமா?. அதுக்கு கஷ்டப்படணும். உருளணும்,புரளணும். மந்திரம் சொல்லணும் அப்படின்னு இதெல்லாம் உங்க மனசு சொல்றதுதான்.

இருக்கிறதிலேயே ஈஸி புத்தரோட டெக்னிக் தாங்க. நாசி என்கிற காற்று புகும் மூக்கில் உங்கள் நினைப்பினை வைங்க. மூச்சு இழுக்கறது, மூச்சுவிடுறது பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. அதெல்லாம் தன்னால் நடக்கும். நடுவில் வேறு ஏதாவது நினைப்பு வந்தால், அதைத்தவிர்க்க எல்லாம் முயற்சி செய்யாதீங்க. அதுபாட்டுக்கு வரும். கொஞ்சநேரம் இருக்கும். அதுவே போகிடும். அப்புறம் மனசை திருப்பி நாசிகளுக்குக் கொண்டு வந்திடுங்க. இதைத்தான் நீங்க பண்ணனும். காலங்கள் போகப்போக, தன்னாலே மற்ற நினைப்புகள் எல்லாம் நிற்க ஆரம்பிச்சுடும். இவ்வளவுதாங்க. புத்தர் வந்து இதுதாங்க சொல்றார். இதுதானாக நடக்கும். இது நீச்சல் குளத்தில் குதிச்ச மாதிரிதான். அருவியில் குதிச்ச மாதிரி தான். நீங்க நீச்சலடிக்க முயற்சி செய்தால், ஒருநாள் நீச்சல் தன்னாலே வந்திடும். ஒன்னு சொல்லிக்குறேன் இதுக்கு மாற்றுக்கருத்துன்னு ஒன்னு சொல்லுங்க நான் ஒத்துக்கிறேன். இதுக்கு மாற்று கருத்துங்கிறதே கிடையாது'' என்றார்.

முன்னதாக நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடன் உதவியாளராக பணியாற்றி வந்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓம்கார், லீலாவதி மற்றும் ருத்ராக்ஷ் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.