“என்னோட முதல் ஹீரோ என் மாமா சூர்யாதான்; வாய்ப்பு யாருக்கு வேணாலும் கிடைக்கலாம்; ஆனா..” லொடுக்கு பாண்டியாக மாறிய கருணாஸ்
உலக அரங்கில் ஒரு தமிழனாக தலைச்சிறந்த நடிகனாக சூர்யா மாமா இருப்பான். இதை நான் மேடைக்காக சொல்லவில்லை. அவரது உழைப்பும், அர்ப்பணிப்பும் அவரை அந்த இடத்திற்கு நிச்சயமாக கொண்டு வரும் என்று நம்புகிறேன். - கருணாஸ்
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ், “என்னுடைய முதல் ஹீரோ சூர்யாதான். நந்தா திரைப்படத்தில் அவருடன் இணைந்து ‘லொடுக்குப்பாண்டி’ கதாபாத்திரத்தில் நடித்தேன். நான் சூர்யா உடன் வேலை பார்த்த அனைத்து திரைப்படங்களும் பெரிய திரைப்படங்கள்தான். வாய்ப்பு யாருக்கு வேண்டுமென்றாலும் கிடைக்கலாம். ஆனால், தன்னுடைய உழைப்பால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் என்னுடைய மாமா சூர்யா..
இந்தியாவின் தலைசிறந்த நடிகன் என்னுடைய மாமா சூர்யா. கங்குவா திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலக அரங்கில் ஒரு தமிழனாக தலைச்சிறந்த நடிகனாக சூர்யா மாமா இருப்பான். இதை நான் மேடைக்காக சொல்லவில்லை. அவரது உழைப்பும், அர்ப்பணிப்பும் அவரை அந்த இடத்திற்கு நிச்சயமாக கொண்டு வரும் என்று நம்புகிறேன். அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நான் சொன்னேன். அவருக்கு கிடைத்தது. அதற்காக நான் கூறியதால்தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்று சொல்லவில்லை.எனக்கு அந்த சிந்தனை வந்தது அவ்வளவுதான்." என்று பேசினார்.
டாபிக்ஸ்