கங்குவா சர்ப்ரைஸ்.. சூர்யாவின் குரல் ஏ.ஐ. நுட்பம் மூலம் பல மொழிகளில் டப்பிங்.. 3500 தியேட்டரில் ரிலீஸ்: ஞானவேல் ராஜா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கங்குவா சர்ப்ரைஸ்.. சூர்யாவின் குரல் ஏ.ஐ. நுட்பம் மூலம் பல மொழிகளில் டப்பிங்.. 3500 தியேட்டரில் ரிலீஸ்: ஞானவேல் ராஜா

கங்குவா சர்ப்ரைஸ்.. சூர்யாவின் குரல் ஏ.ஐ. நுட்பம் மூலம் பல மொழிகளில் டப்பிங்.. 3500 தியேட்டரில் ரிலீஸ்: ஞானவேல் ராஜா

Marimuthu M HT Tamil
Oct 14, 2024 05:38 PM IST

கங்குவா சர்ப்ரைஸ்.. சூர்யாவின் குரல் ஏ.ஐ. நுட்பம் மூலம் பல மொழிகளில் டப்பிங்.. 3500 தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

கங்குவா சர்ப்ரைஸ்.. சூர்யாவின் குரல் ஏ.ஐ. நுட்பம் மூலம் பல மொழிகளில் டப்பிங்.. 3500 தியேட்டரில் ரிலீஸ்: ஞானவேல் ராஜா
கங்குவா சர்ப்ரைஸ்.. சூர்யாவின் குரல் ஏ.ஐ. நுட்பம் மூலம் பல மொழிகளில் டப்பிங்.. 3500 தியேட்டரில் ரிலீஸ்: ஞானவேல் ராஜா

சமீபத்தில் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில், தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா பங்கேற்று, வரவிருக்கும் ’’கங்குவா’’ திரைப்படம் குறித்த விவாதத்தில் பங்கேற்றார்.

அதில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் நடிகை திஷா பதானி நடிப்பில் உருவாகியுள்ள ’கங்குவா’ படம் குறித்து ரசிகர்களுக்கு சில சுவாரஸ்யமான தகவல்களைக் கூறினார். இப்படம் சூர்யா நடிக்கும் 42ஆவது படமாகும்.

கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் எட்டு மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு மற்ற மொழிகளில் டப்பிங் கலைஞர்களை பயன்படுத்தமாட்டோம் என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல், ஸ்பேஸின் கலந்துரையாடலின்போது தெரிவித்தார். ஆனால், சூர்யா அந்த மொழிகளில் டப்பிங் பேச மாட்டார்.

சூர்யா குரலை AI மூலம் டப்பிங்கிற்குப் பயன்படுத்துவோம்: தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா

இதுதொடர்பாக ஈநாடு ஊடகத்தில் கே.இ.ஞானவேல் ராஜா பேசியதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அதில், "சூர்யா கங்குவா படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு மட்டும் டப்பிங் செய்வார். ஆனால் நாங்கள் மற்ற மொழிகளுக்கு அவரது குரலை AI-ஐ மூலம் பயன்படுத்துவோம். இது கோலிவுட்டுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். சமீபத்தில், அமிதாப் பச்சனின் குரலுக்கு வேட்டையன் தயாரிப்பாளர்கள் இதேபோன்ற யுக்தியைக் கையாண்டனர். மேலும், சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் படத்தை வெளியிட விரும்புவதால் இந்த யுக்தி வெற்றி பெறும் என்று நம்புகிறோம்" என்றார், கே.இ. ஞானவேல் ராஜா.

மேலும் அதே ஸ்பேஸ் உரையாடலில், கங்குவா உலகம் முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் ஞானவேல் கூறினார். படத்தை 3டி மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் வெளியிடும் திட்டங்கள் இருந்த நிலையில், இப்போது ஐமேக்ஸ் வடிவில் வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உறுதிபடுத்தியுள்ளார்.

வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இருக்க ரஜினிகாந்த் மற்றும் பிரபாஸ் ஆகியோரையும் படக்குழு அணுகியுள்ளதாக தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார்.

கங்குவா திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்

இந்த கங்குவா படத்தில் ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கங்குவா படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.

கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி பகுதிகளில் நடைபெற்றது.

முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசியிருக்கிறார், சிறுத்தை சிவா.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.