தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rj Balaji Exclusive Interview I Hope To Work With Thalapathy Vijay Soon

RJ Balaji Exclusive: கையில் படத்தை கொடுத்த விஜய்.. வேண்டாம் என்று மறுத்த பாலாஜி! - உள்ளே நடந்தது என்ன? - ஆர்.ஜே. பாலாஜி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2024 01:32 PM IST

உடனே நான் எந்த ஏப்ரல், அடுத்த வருடமாக இருக்குமோ என்று கேட்டேன். ஆனால் அவரோ அந்த வருட ஏப்ரல் என்றார் அதைக்கேட்ட உடன் நான் அப்படியே அதிர்ச்சியாகி விட்டேன். உடனே நான் அவரிடம் என்னால் அது முடியாது என்று கூறினேன்.

ஆர்.ஜே. பாலாஜி நேர்காணல்!
ஆர்.ஜே. பாலாஜி நேர்காணல்!

ட்ரெண்டிங் செய்திகள்

இவரது இயக்கத்தில் ஆ.ஜே. பாலாஜி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், படம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்திற்கு கொடுத்த பிரத்யேக பேட்டி இங்கே!

விஜயுடன் எப்போது இணைவீர்கள்?

இந்த சந்திப்பு வாரிசு மற்றும் லியோ திரைப்படங்களுக்கு முன்னதாக நடந்தது. விஜய் தரப்பில் இருந்து திடீரென்று என்னிடம் கதை கேட்டார்கள். இதனையடுத்து நான் ஒரு கதையை ரெடி செய்து, விஜய் சாரை சந்தித்து சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. ஏப்ரலில் ஷூட்டிங் செல்லலாம் என்று கூறினார்.

அடுத்த வருடமாக இருக்குமோ என்று நினைத்து, நான் எந்த ஏப்ரல் என்று கேட்டேன். ஆனால் அவரோ அந்த வருட ஏப்ரல் என்றார் அதைக்கேட்ட உடன் நான் அதிர்ச்சியாகி விட்டேன். உடனே நான் அவரிடம் என்னால் அது முடியாது என்று கூறிவிட்டேன். 

காரணம், பொதுவாக என்னுடைய திரைப்படங்களுக்கு நான் முழுக்கதையை தயார் செய்ய 6 மாதங்கள் எடுத்துக்கொள்வேன். அத்துடன் விஜய் போன்ற பெரிய ஸ்டாரை நான் இயக்குகிறேன் என்றால், என்னால் முடிந்த சிறந்ததை கொடுக்க வேண்டும். அதற்கு அவர்கள் தரப்பு கொடுத்த நேரம் மிகக்குறைவு. அதனால் நான் விஜயுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. 

எனக்கு விஜய் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் விருப்பம் இருக்கிறது. அதை இந்த யூனிவர்ஸ்  நடத்தி வைக்கும் என்று நம்புகிறேன்” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.