RJ Balaji : வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கும்?- ஆர்.ஜே .பாலாஜி அசத்தல் பதில்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rj Balaji : வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கும்?- ஆர்.ஜே .பாலாஜி அசத்தல் பதில்

RJ Balaji : வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கும்?- ஆர்.ஜே .பாலாஜி அசத்தல் பதில்

Aarthi V HT Tamil Updated Jun 13, 2022 10:16 AM IST
Aarthi V HT Tamil
Updated Jun 13, 2022 10:16 AM IST

வீட்ல விசேஷம் திரைப்படம் சிறப்பாக வந்து இருக்கிறது என ஆர்.ஜே .பாலாஜி தெரிவித்தார்.

<p>ஆர்.ஜே .பாலாஜி</p>
<p>ஆர்.ஜே .பாலாஜி</p>

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இருக்கும் இப்படத்தை ஆர்.ஜே .பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

வீட்ல விசேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ( ஜூன் 12) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "இந்த மூன்று இயக்குநர்கள் எந்த தயாரிப்பாளரையும் நஷ்டப்படுத்தியது கிடையாது. நான் சொந்த உழைப்பில் முன்னேறினேன், எனக்கு என்று உதவ யாருமில்லை என்னுடைய வெற்றிக்குப் பலர் உதவியாக இருந்தனர்.

படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானது. அது 40 ஆயிரம் பார்வைகளை மட்டுமே கடந்து இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 

யூ-டியூப் வைரலுக்காக உருவாக்கப்படும் பாடல்கள் எங்களுக்கு தேவை இல்லை. எப்போது கேட்டாலும் ரசிக்கக் கூடிய பாடல் மட்டுமே தேவை. வீட்ல விசேஷம் திரைப்படம் சிறப்பாக வந்து இருக்கிறது" என்றார்.

இந்தியில் வெளியான பதாய் ஹோ திரைப்படம் போல், வீட்ல விசேஷம் படமும் வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.