தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Riya Vishwanathan: கைவிட்ட விஜய் டிவி.. ஜீ தமிழுக்கு சென்ற ‘ராஜா ராணி’ ரியா; என்ன சீரியல் தெரியுமா?

Riya vishwanathan: கைவிட்ட விஜய் டிவி.. ஜீ தமிழுக்கு சென்ற ‘ராஜா ராணி’ ரியா; என்ன சீரியல் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 25, 2023 01:36 PM IST

ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய ரியா விஸ்வநாதன் ஜீ தமிழ் சேனலுக்கு சென்று இருக்கிறார்.

ரியா விஸ்வநாதன்
ரியா விஸ்வநாதன்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் உருவானது. ஆனால் இடையே ஆல்யா மானசா பிரசவத்திற்காக சென்ற நிலையில் அவருக்கு மாற்றாக சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க ரியா விஸ்வநாதன் நடிக்க ஒப்பந்தமானார். 

அந்த சீரியலுக்கு ஆல்யாவால் ஒரு மார்க்கெட்டிங் இருக்கும் நிலையில், ஆல்யா மீண்டும் வந்தால் இவரின் நிலைமை என்னவாகும் என்ற கேள்விகள் அடிபட்டன. இதனிடையே ஆல்யா சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் புதிய சீரியலில் ஒப்பந்தம் ஆனார். இந்த நிலையில்தான் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ரியா வெளியேற்றம் நடந்தது.

இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த ரியா தன்னுடைய முழு நேரமும் அங்கு போவதாகவும், தனக்கான பர்சனல் நேரம் இல்லாமல் போனதாகவும், அதன் காரணமாகவே அந்த சீரியலில் இருந்து வெளியேறியதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் இவர் தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

சண்டக்கோழி என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலின் போட்டோஷூட் சமீபத்தில் நடந்து முடிந்ததாக தெரிய வந்துள்ளது. அதோடு இந்த சீரியலில் ரியா விஸ்வநாதன் ஜோடியாக சீரியலின் நாயகனாக ஜீ தமிழ்  ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியல் புகழ் நியாஸ் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோ வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்