ரஞ்சித் செய்த தரமான செயல்.. செம காண்டில் பெண்கள்.. என்ன பார்த்தா முட்டாள் மாதிரி தெரியுதா? புலம்பி தள்ளும் ஜாக்குலின்!
ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்தர் உடன் சேர்ந்துக் கொண்டு சண்டை போடுவது போல போட்ட பிராங்க் ஜாக்குலின் உள்ளிட்ட பெண் போட்டியாளர்களை கடுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.

விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 மூன்று தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்த வழங்குகிறார். மூன்று தினங்களுக்கு முன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்கியது.
இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த முறை உள்ளே போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் எனத் தனி தனியாக பிரிக்கபட்டனர். அவர்கள் இருவருக்கும் தனித் தனியாக டாஸ்க் வழங்கப்படுகிறது.
அதிகளவு சண்டை
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு 3 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அதிகளவு சண்டை நடந்துள்ளது. பெண்கள் அவர்கள் அணிக்குள்ளும், ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சண்டையிட்ட நிலையில், இன்று மிகவும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் இருந்த ஆண்கள் அணி நேற்று 2ஆக பிளவுபட்டுள்ளது.