Top Cinema News: சூனியக்காரியாக ஐஸ்வர்யா, வேட்டையன் சென்சார், விஜயகாந்துக்கு மரியாதை..இன்றைய டாப் சினிமா செய்திகள்-rajinikanth vettaiyan censored lubber pandhu team respect for vijayakanth and more cinema news on today sep 27 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News: சூனியக்காரியாக ஐஸ்வர்யா, வேட்டையன் சென்சார், விஜயகாந்துக்கு மரியாதை..இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: சூனியக்காரியாக ஐஸ்வர்யா, வேட்டையன் சென்சார், விஜயகாந்துக்கு மரியாதை..இன்றைய டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 27, 2024 09:49 PM IST

Top Cinema News: சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யா, வேட்டையன் சென்சார், விஜயகாந்துக்கு மரியாதை செய்த லப்பர் பந்து படக்குழு, அனிருத் - ஸ்ரீலீலா இணையும் ஆல்பம் உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Top Cinema News: சூனியக்காரியாக ஐஸ்வர்யா, வேட்டையன் சென்சார், விஜயகாந்துக்கு மரியாதை..இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News: சூனியக்காரியாக ஐஸ்வர்யா, வேட்டையன் சென்சார், விஜயகாந்துக்கு மரியாதை..இன்றைய டாப் சினிமா செய்திகள்

கடந்த வாரம் ஆறு படங்கள் வெளியான நிலையில் இந்த வாரம் 5 படங்கள் ரிலீசாகியுள்ளன. இதையடுத்து இன்றைய நாளின் டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

பிரபாஸின் 25வது படம்

பிரபாஸின் 25வது படம் ஸ்பிரிட் என்ற பெயரில் உருவாகிறது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி, அனிமல் படப்புகழ் சந்தீப் ரெட்டி இயக்குகிறார். படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் பாலிவுட் ஜோடிகளான சயீப் அலிகான் - கரீனா கபூர் ஆகியோர் வில்லன்கள் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

ஆல்பம் பாடலில் இணையும் அனிருத் - ஸ்ரீலீலா

தென்னிந்திய சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக இருந்து வரும் அனிருத் புதிய ஆல்பம் ஒன்று இசையமைக்கிறார். இதில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோயின் ஸ்ரீலீலா நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது

சென்சார் செய்யப்பட்ட வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் சென்சார் செய்யப்பட்டிருக்கும் நிலையில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யா

63 நாயன்மார்களின் ஒருவரான கண்ணப்ப நாயனார் பற்றிய கதை கண்ணப்பா என்ற பெயரில் தெலுங்கில் உருவாகிறது. தெலுங்கு சினிமா மூத்த நடிகர் மோகன் பாபு மகன் மனோஜ் மஞ்சு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், தமிழில் முன்னாள் ஹீரோயினாகவும் தற்போது மாமியார், அக்கா வேடங்களில் நடித்து வருபவருமான ஐஸ்வர்யா சூனியக்காரியாக நடிக்கிறார். ரூ. 300 கோடி பட்ஜெட்டில் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

யோகி பாபு புதிய படத்தின் டீசர் வெளியீடு

மெஹந்தி சர்க்கஸ் படம் மூலம் அறிமுகமான மாதம்பட்ட ரங்கராஜ், யோகி பாபு பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் மிஸ். மேகி. இந்த படத்தில் ஆத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். இதையடுத்து படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் வயதான லேடி கெட்டப்பில் யோகி பாபு நடித்துள்ளார். அவரது லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதோடு, இந்த டீசர் விடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

தேவரா படத்தின் போஸ்டர் தீ பிடித்ததால் பரபரப்பு

தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கும் தேவரா திரைப்படம் கோலாகலமாக இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீசை நடிகர் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்.

ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது அருகில் இருந்த தேவரா கட்அவுட் மீது தீப்பொறி பட்டு போஸ்டர் மளமளவென் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

லப்பர் பந்து குழுவினர் விஜயகாந்துக்கு மரியாதை

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்பட பலரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் படம் லப்பர் பந்து.

படத்தில் அட்டகத்தி தினேஷ், விஜயகாந்தின் ரசிகராக தோன்றுகிறார். இதையடுத்து படத்தில் ஏகப்பட்ட விஜயகாந்த் ரெபரன்ஸ், அவரது ஹிட் பாடல்கள் இடம்பிடித்துள்ளன. இதைத்தொடர்ந்து லப்பர் பந்து படக்குழுவினர் சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு சென்று அங்கு இருக்கும் விஜயகாந்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமரன் - சாய் பல்லவி கேரக்டரில் அறிமுக விடியோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இதையடுத்து அவரது கேரக்டரின் அறிமுக விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது

ஓடிடியில் 7 மொழிகளில் வாழை ரிலீஸ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் அள்ளியது. பெரிய நடிகர்கள் யாரும் நடித்திடாத இந்த படத்தில் நிகிலா விமல் கதையின் நாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து இந்த படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் தவிர 7 மொழிகளில் வெளியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

22 நாளில் தி கோட் வசூல் நிலவரம்

தளபதி விஜய் நடிப்பில் இந்த மாதம் முதல் வாரத்தில் வெளியானது தி கோட் திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. இதையடுத்து படம் வெளியாகி 22 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் தி கோட் இதுவரை ரூ. 428 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய் படங்களில் அதிக வசூலை பெற்ற இரண்டாவது படமாக இது அமைந்துள்ளது.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.