Jr NTR: இனி அந்த இடத்துக்கு இவர் தான்... அடித்து சொன்ன ஜூனியர் என்டிஆர்... யாரா இருக்கும்?
Jr NTR: இசையமைப்பாளர் அனிருத் தான் இந்தியாவின் அடுத்த ஏ.ஆர். ரஹ்மான் என நடிகர் ஜூனியர் என்டிஆர் புகழ்ந்துள்ளார். இவரது தேவரா படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் கலக்கி வரும் ஜூனியர் என்டிஆர், இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகுந்த நெருக்கமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் கொரட்டலா சிவா இயக்கத்தில் தேவரா-1 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ளது.
தேவரா-1
இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் என பல திரைப் பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழு அதற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய ஜூனியர் என்டிஆர், இசையமைப்பாளர் அனிருத்தை மிகவும் பாராட்டியுள்ளார்.
அடுத்த ஏஆர் ரஹ்மான்
அதில், இசையை அதிகம் நேசிப்பவன் நான். நான் அனிருத்தின் பாடல்களை கேட்டுள்ளேன். அவர் மிகவும் திறமையானவர். அவர் ஹைபிச் பாடல்களும் தருகிறார். மெல்லிசையும் தருகிறார். இவை மிக அருமையாக உள்ளது. நாயகனுக்கான பாடல் என்றாலும், நடனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாடல் என்றாலும் அனைத்திலும் அவரது முழு உழைப்பையும் தருகிறார்.
அவரிடம் திறமை இல்லை என்றால் இத்தனை விதமான ஹிட் பாடல்களை அவரால் தரமுடிந்திருக்காது. நான் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் இவரது இசையை ரசிக்கிறார்கள். தென்னிந்தியாவில், இளையராஜா, ஏஆர் ரஹ்மான், கீரவாணி என ஜாம்பவான்கள் உள்ளனர். தற்போது அந்த இடத்தை அனிருத் பிடித்து விட்டார் என்பதில் சந்தேகமில்லை.
இதயத்துடன் ஆன்மாவை சேர்த்தார்
அதுமட்டுமின்றி, அனிருத் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் அடுத்த ஏஆர் ரஹ்மானாக மாறி வருகிறார். நீங்கள் தேவரா படத்தின் பாடல்களை கேட்டுருப்பீர்கள். இந்தப் பாடல்களில் அனிருத் அவரது இதயத்துடன் ஆன்மாவையும் சேர்த்து இசையமைத்துள்ளார். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. நான் தேவரா திரைக்கு வந்த உடன், படத்தில் அவர் அளித்துள்ள பின்னணி இசையைக் கேட்க ஆவலாக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதுதான் என் ஆசை
முன்னதாக படத்தின் விழாவில், சென்னை எனக்கு பிடித்த இடம். சென்னையில்தான் நான் குச்சுப்புடி நடனம் கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாது. சினிமாவை கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்று பிரித்து பார்ப்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை. இங்கு எல்லாமே சினிமாதான். தனக்கு நேரடி தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக ஜூனியர் என்டிஆர் கூறினார். எனது விரும்பமான இயக்குநர் வெற்றி மாறன் எனவும், இவர்கள் கூட்டணியில் படம் அமைந்தால், அதனை தெலுங்கில் டப் செய்யலாம் எனவும் நேரடி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள், அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.