Sreeleela:'இந்தாங்க'- திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வெளியேவந்தபின் ரசிகருக்கு ஸ்ரீலீலா தந்த பிரசாதம்!
- திருப்பதியில் ஸ்ரீலீலா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

நடிகை ஸ்ரீலீலா தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
நடிகை ஸ்ரீலீலா, தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருகிறார். நடிகர் மகேஷ் பாபுவுடன், ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஹிட்டடித்தது. அதேபோல், இப்படத்தில் வரும் ‘குறிச்சி மாடத்துபெட்டி’ என்னும் பாடல், தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்ரீலீலாவின் நடன அசைவுகள் இளசுகளை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகை ஸ்ரீலீலா தனது குடும்பத்தினருடன் நேற்று(பிப்ரவரி 19) திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார்.
அந்த தரிசனத்தின்போது, நடிகை ஸ்ரீலீலா தாவணி அணிந்து, நெற்றியில் நாமம் சூடியிருந்தார்.