‘ஜெய் ஸ்ரீ ராம்’- னு சொல்ல மாட்டாங்க.. இவங்க சீதையா? - இந்த பொண்ண தடை பண்ணுங்க;அமரன் ரிலீஸ் ஆக” -சர்ச்சையில் சாய்பல்லவி
‘ஜெய் ஸ்ரீராம்’என்று சொல்ல மறுக்கும் சாய்பல்லவி நடித்த அமரன் படத்தையும், அவரை தடை செய்யுங்கள் என்று சமூகவலைதளங்களில் கமெண்டுகள் பதிவிடப்பட்டு இருக்கின்றன.

நடிகை சாய் பல்லவியின் கருத்திற்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
பிரபல நடிகையான சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கும் ‘அமரன்’ திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்படம் தொடர்பான புரோமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், சாய்பல்லவி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
என்ன நடந்தது?
ராணா, சாய் பல்லவி நடித்த ‘விராத பர்வம்’ படம் தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில், “ காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் தீவிரவாதிகளால், இந்துக்கள் கொல்லப்பட்டதை காட்டி இருப்பார்கள். அது பயங்கரவாதம் என்றால், கொரோனா காலத்தில் பசுவை இழுத்துச் சென்ற இஸ்லாமியர் மீது கொடூர தாக்குதல் நடத்தி ‘ ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பியது மட்டும் சரியா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம். இங்கு அனைவரும் சமமானவர்கள். ஆகையால், சாதி, மதத்தால் மக்களை பிரிப்பது தவறானது” என்று பேசினார்.