அமரன் அடித்த சிக்சர்! இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா? அப்போ 100 கோடி உறுதி!
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கருதப்படும் சிவாகார்த்திகேயன் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இந்த தீபாவளிக்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும் அமரன் படம் வெளியானது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கருதப்படும் சிவாகார்த்திகேயன் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இந்த தீபாவளிக்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும் அமரன் படம் வெளியானது. இப்படம் விடுமுறை நாட்கள் ஆன தீபாவளி பண்டிகையில் வெளியானதால் இரண்டே நாட்களில் அதிக வசூலை பெற்றுள்ளது மேலும் இப்படத்தின் வசூல் இன்னும் இரு தினங்களில் 100 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளி அன்று வெளியானது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இராணுவ வீரரின் உண்மைக் கதை
இப்படம் காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்தராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. உண்மைக் கதை என்பதால் படம் வெளியாகும் முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய பெரிய ரக துப்பாக்கி உண்மையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசூல்
தொடர்ந்து 4 நாட்கள் பொது விடுமுறையாக இருக்கும் நாளில் இப்படம் வெளியாகி இருந்ததால் நல்ல வசூலை பெற்றுள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவிலேயே அதிக வசூல் ஆகியிருந்தது. இந்நிலையில் 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள அமரன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமரன் படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 40.65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் ரூ. 21 கோடிக்கும், இரண்டாம் நாளில் 19 கோடிக்கும் வசூல் ஆகியுள்ளது. மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் ரூ. 100 கோடியை அமரன் படம் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் பேசப்படும் அமரன்
ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை படமாகக் கொண்டுள்ளதால் இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இப்படத்தை பார்த்த பலர் சிவகார்த்திகேயன் ராணுவத்தில் சேர வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் இராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குடும்ப ரசிகர்களுக்கும் இப்படம் மிகவும் பிடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வெளியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாண்டிகைகளையே சிவகார்த்திகேயன் குறி வைத்து வருகிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்