தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth Car Gift: அலப்பறை கிளப்புறோம்.. ரஜினிக்கு கிடைத்த பிஎம்டபுள்யூ கார்

Rajinikanth Car Gift: அலப்பறை கிளப்புறோம்.. ரஜினிக்கு கிடைத்த பிஎம்டபுள்யூ கார்

Aarthi V HT Tamil
Sep 01, 2023 12:34 PM IST

ஜெயிலர் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர், ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக வழங்கினார்.

ஜெயிலர் தயாரிப்பாளர், ரஜினி
ஜெயிலர் தயாரிப்பாளர், ரஜினி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றி அடைந்த நிலையில் படத்தில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த்திற்கு விரை உயர்ந்த ஆடம்பர கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.

இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ஜெயிலர் சக்சஸ் கொண்டாட்டம் தொடர்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பல்வேறு கார் மாடல்கள் காண்பிக்கப்பட்டது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், BMW X7 காரை தேர்வு செய்தார். கலாநிதி மாறன், ரஜினிகாந்த் தேர்வு செய்த காரின் சாவியை அவரிடம் வழங்கினார் “ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்திடம் வசூலில் ரஜினிகாந்தின் பங்கை காசோலையை வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

முதற்கட்டமாக ஜெயிலர் திரைப்படம் 350 கோடியை தாண்டிவிட்டதாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம், இரண்டாம் கட்டமாக 500 கோடியை தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்