தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  41 Years Of Pudhu Kavithai: காதலுக்காக போராடும் காதலர்கள்! ரஜினியின் எமோஷனல் பக்கத்தை வெளிக்காட்டிய Feelgood படம்

41 Years of Pudhu Kavithai: காதலுக்காக போராடும் காதலர்கள்! ரஜினியின் எமோஷனல் பக்கத்தை வெளிக்காட்டிய FeelGood படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 11, 2023 05:00 AM IST

கொஞ்சம் அர்ஜுன் ரெட்டி, கொஞ்சம் ஆட்டோ கிராப், 96 ஆகிய படங்களின் காட்சிகள் சேர்ந்து ரஜினி நடிப்பில் 41 ஆண்டுகளுக்கு முன்பே காதல் கலந்த Feel Good திரைப்படமாக புதுக்கவிதை வெளியாகி கல்ட் கிளாசிக்காக இருந்து வருகிறது. ரஜினிகாந்த் - எஸ்பி முத்துராமன் கூட்டணியின் மற்றொரு ஹிட் படமாக இந்தப் படம் உள்ளது.

ரஜினிகாந்த் - எஸ்பி முத்துராமன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான புதுக்கவிதை திரைப்படம்
ரஜினிகாந்த் - எஸ்பி முத்துராமன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான புதுக்கவிதை திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆண்களுக்கான Mood Swing எப்படி இருக்கும் என காட்டிய அர்ஜுன் ரெட்டி, காதலில் தோல்வியுற்ற ஹீரோ குடிபழக்கத்துக்கு அடிமையாகி இன்னொரு பெண் மூலம் தன்னை மீட்டு எடுக்கும் ஆட்டோகிராப், காதலித்த பெண்ணை அவள் திருமணமான பிறகு சந்தித்து பீலிங்ஸை கொட்டும் 96 என ட்ரெண்ட் செட்டர் படங்களாக அமைந்த ஒட்டு மொத்த ரெபரன்ஸும் கொட்டி கிடக்கும் படமாக புதுக்கவிதை உள்ளது.

இந்த படத்தை புதிதாக பார்ப்பவர்களுக்கு மேற்கூறியது படங்கள் மட்டுமில்லாமல், மேலும் சில ஹிட் தமிழ் சினிமாக்களின் கதையுடன் ஒத்துப்போவதை தவிர்க்க முடியாது என்றே உறுதியாக கூறலாம்.

பைக் ரேஸராக அறிமுகமாகி தனது ஸ்டைலில் அடாவடி நடிப்பை வெளிப்படுத்தும் ரஜினிகாந்த், போக போக காதல் ரசம் சொட்டும் நபராக மாறி அபார நடிப்பில் விருந்து படைத்திருப்பார். புற்றுநோயால் இறந்து போன நடிகை ஜோதி கதையின் நாயகியாக, ரஜினிக்கு ஈடுகொடுக்கும் விதமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

முரட்டுகாளை, கழுகு, ராணுவ வீரன், போக்கிரி ராஜா என ரஜினியை வைத்து தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களை இயக்கி வந்தார் எஸ்.பி. முத்துராமன். இடையில் நெற்றிக்கண் என்ற வித்தியாசமான கதையை இயக்கியிருந்தாலும், அதில் ரஜினியை ஒரு கதாபாத்திரம் நெகடிவ் ஷேடில் இருந்தது.

இதனால் ஆறிலிருந்து அறுபதுவரை படத்தை போல் ரஜினியின் நடிப்பு திறமை வெளிகொண்டு வரும் விதமாக புதுக்கவிதை படத்தை உருவாக்கினார். அதே சமயம் ரஜினியின் ரசிகர்களை கவரும் விதமாக ஆக்‌ஷன் காட்சிகளையும் வைத்து சமரசம் செய்திருப்பார். இந்த படம் ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ரஜினியின் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது.

இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெறும் வெள்ளை புறா ஒன்று, வா வா வசந்தமே பாடல்கள் காலத்தில் அழியாமல் இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களாக உள்ளன. 

ரஜினியை முழுக்க முழுக்க எமோஷனலை வெளிப்படுத்தும் ஹீரோவாகவே காட்டியிருப்பார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். இவர்கள் இருவர் கூட்டணியில் வெளி வந்த Feel Good படமான புதுக்கவிதை வெளியாகி இன்றுடன் 41 ஆண்டுகள் ஆகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்