தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2: Soodaana: ‘சூடான தீ கங்கு மாதிரி.. இருப்பானே என் சாமி’: தூளாக வெளியான புஷ்பா 2ஆவது பாடல் ஃபயர் விட்ட ரசிகர்கள்

Pushpa 2: Soodaana: ‘சூடான தீ கங்கு மாதிரி.. இருப்பானே என் சாமி’: தூளாக வெளியான புஷ்பா 2ஆவது பாடல் ஃபயர் விட்ட ரசிகர்கள்

Marimuthu M HT Tamil
May 29, 2024 03:54 PM IST

Pushpa 2: Soodaana: புஷ்பா 2 வெளியீட்டிற்காக பலர் காத்திருக்கும்போது, தயாரிப்பாளர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் ஸ்ரீவள்ளி மற்றும் புஷ்பாவாக ஜோடி சேர்ந்து ஆடிய ’சூடான தீ கங்கு மாதிரி’ வெளியிட்டுள்ளனர்.

Pushpa 2: Soodaana: சூடான தீ கங்கு மாதிரி.. இருப்பானே என் சாமி.. தூளாக வெளியான புஷ்பா 2ஆவது பாடல் ஃபயர் விட்ட ரசிகர்கள்
Pushpa 2: Soodaana: சூடான தீ கங்கு மாதிரி.. இருப்பானே என் சாமி.. தூளாக வெளியான புஷ்பா 2ஆவது பாடல் ஃபயர் விட்ட ரசிகர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

புஷ்பா படம் எத்தகையது?

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' முதல் பாகம் டிசம்பர் 17, 2021அன்று வெளியிடப்பட்டது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றி, இப்படம் காட்சியமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் முதலீடுசெய்து எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில், 360 கோடி வசூல்செய்து சாதனைப் படைத்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு அல்லு அர்ஜூன் கதையம்சம் உள்ள படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்க கவனம் செலுத்தவில்லை. முழுக்க 'புஷ்பா 2' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

மேலும், புஷ்பா: தி ரைஸ் (2021) பல இதயங்களை வென்றதற்கு ஒரு முக்கிய காரணம், படத்தில் புஷ்பாவாக அல்லு அர்ஜூனும் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனாவும் அற்புதமாக நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்ட்ரியும் சூப்பராக இருந்தது.

புஷ்பா 2 திரைப்பட நடிகர்கள்:

புஷ்பா 2 திரைப்படத்தினை, புஷ்பா 1 படத்தை இயக்கிய சுகுமாரே எழுதி இயக்குகிறார். படத்திற்கான வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். ‘’புஷ்பா 2: தி ரூல்'' படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூன் ’புஷ்பராஜ்’ என்னும் கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ’ஸ்ரீவள்ளி’ என்னும் கதாபாத்திரத்திலும் மற்றும் ஃபஹத் பாசில், பன்வர் சிங் ஷெகாவத் ஆகிய கதாபாத்திரத்திலும் மீண்டும் நடிக்கின்றனர்.

புஷ்பா 2 எத்தனை மொழிகளில் ரிலீஸ்:

இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியான ’’புஷ்பா: தி ரைஸ்’’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படம் இந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, ரஷ்ய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

புஷ்பா 2: செகண்ட் சிங்கிள் ரிலீஸ்:

புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளில் ஒரு சிறப்பு டீஸரை வெளியிட்டனர். அதில் அவர் ஜதாரா என்னும் பழங்குடியினர் கெட்டப்பில் காணப்பட்டார். அதேபோல், ’புஷ்பா புஷ்பா புஷ்பராஜ்’ என்னும் முதல் சிங்கிள் பாடலும் வெளியானது. இந்நிலையில் இன்று புஷ்பா 2: தி ரூல் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலும் வெளியாகியுள்ளது.

இப்பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இப்பாடலை தமிழில் கவிஞர் விவேகா எழுதியுள்ளார். ’’பார்க்கதான் பாறை.. உள்ளேயே வேற..’’என அனைத்து மக்களுக்கும் புரியும்படி எளிய தமிழில் விவேகா எழுதியுள்ளார்.

இப்பாடல் ஒரு அதிகாரப்பூர்வமாக இல்லாமல், சூட்டிங்கில் நடப்பதை மறைந்து இருந்து எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது. குறிப்பாக, ஒரு மேக்கிங் வீடியோ போல் ஜாலியாக காட்சிகள் இருக்கின்றன. இதில் ராஷ்மிகாவும் அல்லு அர்ஜூனும் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கைகளை வீசி அசைந்து, அசைந்து மிக லைட்டாக ஒரு நடன அசைவைப் போடுகின்றனர். அது ரசிக்க வைக்கிறது. இப்பாடலுக்கான நடன அமைப்பினை மகாராஜா கணேஷ் ஆச்சார்யா செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து பரவசமான ரசிகர் ஒருவர் "அல்லு + ராஷ்மிகா = பிளாக்பஸ்டர் ஜோடி❤️❤️❤️" என எழுதியுள்ளார். அதே நேரத்தில் மற்றொரு சமூக ஊடக பயனர், "இந்த படத்தில் புஷ்பா & ஸ்ரீவள்ளி தீ ஜோடி" எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு இணைய பயனர், ’’கூஸ்பம்ப்ஸ் உத்தரவாதம்" என எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் பலர் அவர்களை 'சூப்பர் ஹிட் ஜோடி' என்று குறிப்பிட்டனர்.

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்