Pushpa2FirstSingle: 3 வருஷ உழைப்பு; பழங்குடியினர் கெட்அப்;டானாக புஷ்பா -நாளை மாஸாக ரிலீஸாகும் புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்
Pushpa2FirstSingle: புஷ்பா 2 தி ரூல் படத்தின் முதல் சிங்கிள் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.

Pushpa2FirstSingle: புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் சிங்கிள் நாளை மாலை வெளியிடுவதாக படத்தின் தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' முதல் பாகம் டிசம்பர் 17, 2021அன்று வெளியிடப்பட்டது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றி, இப்படம் காட்சியமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் முதலீடுசெய்து எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில், 360 கோடி வசூல்செய்து சாதனைப் படைத்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு அல்லு அர்ஜூன் கதையம்சம் உள்ள படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்க கவனம் செலுத்தவில்லை. முழுக்க 'புஷ்பா 2' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
புஷ்பா 2 திரைப்பட நடிகர்கள்:
புஷ்பா 2 திரைப்படத்தினை, புஷ்பா 1 படத்தை இயக்கிய சுகுமாரே எழுதி இயக்குகிறார். படத்திற்கான வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். ‘’புஷ்பா 2: தி ரூல்'' படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூன் ’புஷ்பராஜ்’ என்னும் கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ’ஸ்ரீவள்ளி’ என்னும் கதாபாத்திரத்திலும் மற்றும் ஃபஹத் பாசில், பன்வர் சிங் ஷெகாவத் ஆகிய கதாபாத்திரத்திலும் மீண்டும் நடிக்கின்றனர்.