Rashmika Mandanna: ‘’ப்பா.. 10 வருஷத்தில் என்ன வளர்ச்சி'': ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika Mandanna: ‘’ப்பா.. 10 வருஷத்தில் என்ன வளர்ச்சி'': ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?

Rashmika Mandanna: ‘’ப்பா.. 10 வருஷத்தில் என்ன வளர்ச்சி'': ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?

Marimuthu M HT Tamil Published May 15, 2024 11:05 AM IST
Marimuthu M HT Tamil
Published May 15, 2024 11:05 AM IST

Rashmika Mandanna: 'இளம் இந்தியா 10 வருஷத்தில் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது' என்று ராஷ்மிகா மந்தனா கூறினார். பிரதமர் மோடியைப் பாராட்டியதோடு, 'இந்தியா புத்திசாலித்தனமான நாடு' என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறினார்.

Rashmika Mandanna: ‘’ப்பா.. 10 வருஷத்தில் என்ன வளர்ச்சி'': ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?
Rashmika Mandanna: ‘’ப்பா.. 10 வருஷத்தில் என்ன வளர்ச்சி'': ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, மும்பை துறைமுகத்தில் இருந்து நவி மும்பையில் இருக்கும் ஜவஹர்லால் நேரு வரையிலான தூரத்துக்கு ரூ.17 ஆயிரத்து 840 கோடிக்கு ஆறு வழிப் பாலத்தை அமைத்தது. இது கடலில் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் 5.5 கி.மீ நீளமும் கொண்டது. இதற்கு '’அடல் பிஹாரி வாஜ்பாய் சேவ்ரி-நவ ஷேவா அடல் சேது’’ பாலம் எனப் பெயரிடப்பட்டது. இப்பாலத்தை பிரதமர் மோடி, ஜனவரி மாதம் திறந்து வைத்தார். 

மும்பையில் நடைபெற்ற நெட்ஃபிளிக்ஸ் தொடரான ஹீராமாண்டி: தி டைமண்ட் பஜாரின் பிரீமியரில், ரஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார்.

அப்போது ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், '’அடல் பிஹாரி வாஜ்பாய் சேவ்ரி-நவ ஷேவா அடல் சேது பாலம்,  மும்பையின் போக்குவரத்து நெட்வொர்க்கிற்கு ஒரு கேம் சேஞ்சர். இந்தியா எங்கும் வளர்ச்சியில் தடைபட்டு நிற்கவில்லை'’ என்று கூறினார்.

20 நிமிடங்களில் குறைந்த 2 மணிநேரப் பயணம்:

குறிப்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா அடல் சேது பாலம் குறித்துப் பேசியதாவது, "இரண்டு மணி நேரப் பயணத்தை 20 நிமிடங்களில் முடித்துவிடலாம். நீங்கள் அதை நம்பமாட்டீர்கள். இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள். நவி மும்பை முதல் மும்பை வரை மற்றும் கோவா முதல் மும்பை வரை மற்றும் பெங்களூரு முதல் மும்பை வரை செல்லக்கூடிய, அனைத்து பயணங்களும் மிகவும் எளிதாகவும் அற்புதமான உள்கட்டமைப்புடனும் செய்யப்பட்டுள்ளன. இது எனக்குப் பெருமை அளிக்கிறது" என்றார்.

மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறுகையில், "இப்போது, குறைந்தபட்சம், இந்தியா எங்கும் வளர்ச்சியில் நிற்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இப்போது நாட்டின் வளர்ச்சியைப் பாருங்கள். 

கடந்த 10 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்துள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உள்கட்டமைப்பின் வளர்ச்சி, நம் நாட்டில் சாலை திட்டங்கள் எல்லாம் புத்திசாலித்தனமானது . இப்போது இது எங்கள் நேரம் என்று நினைக்கிறேன். இந்த 20 கி.மீ., தூரப் பால கட்டுமானம், ஏழு வருஷத்துல முடிஞ்சு ஆச்சர்யமா இருக்கு. அதைப் பாருங்க. சத்தியமா நான் வாயடைத்துப் போயிட்டேன். இந்தியா புத்திசாலித்தனமான நாடு என்று நான் சொல்ல விரும்புகிறேன்’’ என்றார்.

'சரியான பாதையில் செல்கிறது'

மேலும் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, '’இளம் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் இப்போது 'மிகவும் பொறுப்பாக' இருக்கிறார்கள். நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் தங்கள் வேலையைப் பார்க்கின்றனர். அவர்கள் பாதிக்கப்படுவதில்லை’' என்று கூறியுள்ளார். 

மேலும் ராஷ்மிகா, ‘’மக்கள் உண்மையில் இந்த வளர்ச்சியைப் பார்க்கிறார்கள். மக்கள் மிகவும் பொறுப்பாக இருக்கிறார்கள். நாடு 'சரியான வழியில் செல்கிறது'’’ என்று அவர் மேலும் கூறினார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து ’’புஷ்பா 2: தி ரூல்’’ படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. மேலும் ரன்பீர் கபூருடன் சேர்ந்து நடித்து பிளாக்பஸ்டரான ’’அனிமல்’’ படத்தில் நடித்திருந்தார்.